Search This Blog

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்:

ஆசிரியர்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். அத்தகைய ஆசிரியர்களை வணங்கி அவர்களின் சேவையை நினைவு கூறும் நாளே ஆசிரியர் தினம். ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை நாடு முழுவதும் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் ராதகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர்.

ஆசிரியரை பெருமைப் படுத்துவோம்
ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..!

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர்.
வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு அவருடைய சேவையை பாராட்டி 133 கௌரவ டாக்டர் பட்டங்கள் வரை கிடைத்துள்ளன.

ஒரு ஆசிரியர் மாணவனை எப்படி அணுக வேண்டும்.? Dr.ராதாகிருஷ்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் !!

முன்னாள் ஜனாதிபதி என்றாலும் எப்போதுமே ஆசிரியர் என்னும் பணியையே விரும்பிடும் டாக்டர் சர்வப் பள்ளி ராதகிருஷ்ணன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

ஆங்கிலம் கற்க அனுமதியில்லை :
சாதரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ராதகிருஷ்ணனை மதம் சார்ந்த விஷயங்களை அதில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றே விரும்பினார் அவரது தந்தை. அதற்காக ராதாகிருஷ்ணனை ஆங்கில கற்க கூட சம்மதிக்கவில்லை.

கடவுள் சுட்ட ரொட்டி :
நிறவெறிப்பிரச்சனை அதிகமாக நடந்த அந்த காலத்தில் ஒரு அழகான விளக்கத்தை கொடுத்தார். கடவுள் ரொட்டி சுட்டார் ஆரம்பவத்தில் பக்குவம் தெரியாததால் கருகவிட்டுவிட்டார். அவர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருக்கும் கறுப்பர்கள்.

அடுத்த ரொட்டியை கருகவிடக்கூடாது என்று வேகமாக எடுத்துவிடுகிறார் அவர்கள் தான் வெள்ளையர்கள். இரண்டு அனுபவத்திற்கு பிறகு சரியான பக்குவத்துடன் எடுத்துவர்கள் தான் இந்தியர்கள் என்றார்.

ஒரே இந்தியர் :
சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டவர். உலகப் பல்கலைக்கழகங்களில் 17 டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் ராதாகிருஷ்ணன் தான்.

ஊருக்குப் பெருமை :
ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக, அயல்நாட்டு தூதுவராக, குடியரசுத் துணைத் தலைவராக, குடியரசுத் தலைவராக உயர் பதவிகள் பல வகித்து, அந்தப் பதவிகளுக்கு கெளரவம் ஏற்படும் வகையில் வாழ்ந்து காட்டியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
எல்லா இடங்களிலும் தான் பிறந்த ஊரான திருத்தணி அருகே இருக்கும் ‘சர்வப்பள்ளி' என்ற கிராமத்தின் பெயரை தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு சிறப்பு செய்தார்.

மாணவர்கள் குதிரையாய் :
ஒருமுறை டாக்டர் ராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து கல்கத்தா பல்கலைக் கழகத்துக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிலை. இச்செய்தி மைசூர் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பெருத்த வேதனையை அளித்தது.
பல்கலைக்கழக வளாகத் திலிருந்து ரெயில் நிலையத்திற்கு குதிரை வண்டியில் புறப்பட தயாரானார் ராதாகிருஷ்ணன். ஆனால், மாணவர்கள் அன்பின் மிகுதியால் வண்டியில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு தாங்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.

பால் சைவமா? அசைவமா? :
தமிழ்நாட்டில் முதன் முதலாக காந்திஜியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, பசுவின் ரத்தத்திலிருந்து உற்பத்தியாவது தானே பால். அது இறைச்சிக்கு சமானம் என்றார் காந்தி. உடனே ராதாகிருஷ்ணன், தாயின் பாலை உண்டு வளரும் மனிதன். அவள் ரத்தத்தின் சத்தான பாலை, அதாவது மனித இறைச்சியின் சாரத்தைத்தானே குடித்து வளர்கிறான். அப்படியானால் மனிதனாக பிறந்த யாருமே சைவ உணவு சாப்பிடுபவர்கள் இல்லை என்றார்.

அரக்கனையும் அரவணைத்த ஆசிரியர் :
1950ல் இந்திய அரசு ராதாகிருஷ்ணனை ரஷ்யாவின் அரசாங்கத் தூதுவராக நியமித்தது. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தார். ரஷ்யாவின் தூதர் பணி முடிந்து இந்தியா திரும்புகையில் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது நோயுற்றிருந்த ஸ்டாலினை அருகில் சென்று ஆரத்தழுவிக் கொண்டார்.
ராதாகிருஷ்ணனின் இந்த அன்பினால் மெய்சிலிர்த்த ஸ்டாலின் ,மற்றவர்களைப் போல் என்னை அரக்கன் என்று நினைக்காமல் மனிதனாக என்னை அணுகிய முதல் நபர் நீங்கள் தான் என்று பாராட்டினார்.

தத்துவ துறைக்கு மரியாதை :
ராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உலகின் மிகச்சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவராக விளங்கிய பெர்ட்ரண்ட் ரஸ்சல் என்பவர், இந்தியாவின் ராதாகிருஷ்ணனை ஜனாதிபதி ஆக்கியிருப்பது தத்துவ துறைக்கே செய்யப்பட்ட மரியாதை என்று புகழாரம் சூட்டினார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url