Search This Blog

ஜூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் ( International Day in Support of Torture Victims ):

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
ஐக்கிய நாடுகள் அவையினால் சூன் 26ம் நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.

வரலாறு :
சூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.
இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு மருத்துவத்தீர்வு அளிக்கின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url