ஜூன் 14 உலக இரத்த தான தினம் (World Blood Donor Day)
* ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம் (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.
* மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளையும், இரத்த தானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
* இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) 1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.
* இவர் இர்வின் பாப்பருடன் இணைந்து 1909-ல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ (polio Virus) கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1926-ல் அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது. மேலும் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901-ல் முதன்முதலாக கண்டறிந்தார்.
* 1927-ல் பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930-ல் இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75வது வயதில் (1943) மறைந்தார்.