அக்டோபர் முதல் திங்கள் - உலக குடியிருப்பு தினம் (World Habit Day):
மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது.
இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா.
பொதுச்சபை 1985ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
இதன்படி அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது. நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.