அக்டோபர் – 1 - உலக முதியோர் தினம் (International Day of Older Persons):
மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது.
முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.