அக்டோபர் – 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child):
அக்டோபர் – 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child):
பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டால்,
சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 
கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகிறது. அது தவிர குழந்தை திருமணம்,
வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐ நா சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும்.
பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.
இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது.
இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.