செப்டம்பர் 30 - பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) :
ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420)
நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.
ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.