ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.
இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
*‘இயற்கையோடு மக்களை இணைத்தல்’ என்பதே உலக சுற்றுச்சூழல் தினம் 2017-ன் கருத்து வாசகம்.*
நாம் எவ்வாறு இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கிறோம், எவ்வாறு அதனோடு உள்ளார்ந்த விதமாக சார்ந்துள்ளோம் என்பதை சிந்திக்கும் படி இந்த ஆண்டு வாசகம் நம்மைத் தூண்டுகிறது.
இந்த முக்கிய உறவை வளர்த்து அனுபவிப்பதற்கான மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் வழிகளை கண்டறிய அது நமக்கு சவால் விடுகிறது.
‘இயற்கையோடு மக்களை இணைத்தல்’ என்ற வாசகம் நம்மை வெளியேறி இயற்கைக்குள் சென்று அதன் அழகையும் முக்கியத்துவத்தையும் அறிந்து நாம் பகிர்ந்து கொள்ளும் உலகத்தை பாதுகாக்கவும் அழைக்கிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் எங்கும் எவருக்குமான தினம் ஆகும். உலகைப் பாதுகாக்க எதையாவது செய்யும் மக்களுக்கான தினம். ஒவ்வொரு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கும் வெவ்வேறு ஏற்றுநடத்தும் நாடு உண்டு. இந்த ஆண்டு அது கானடா நாடாகும்.
“மாபெரும் கழிவு மேலாண்மை முயற்சியை மேற்கொள்ளுவதற்காக இந்தியா உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறித்துள்ளது”
‘இயற்கையோடு இணைந்து’ உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவின் கழிவு மேலாண்மையை மேம்படுத்த மாபெரும் முயற்சியை மேற்கொள்ளுமாறு இந்தியர்களைப் பிரதம மந்திரி அழைத்துள்ளார்.
4000 நகரங்களில் நிறக் குறியீட்டு குப்பைக் கூடைகளை நிர்வாக அமைப்புகள் வைக்கும்.
இவற்றின் மூலம் திடக் கழிவுகளில் இருந்து மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி அல்லது உரம் போன்று மறுபடியும் பயன்படுத்தப்படும்.
மானிட நலத்தில் இயற்கையின் முக்கியத்துவம் பற்றி இந்தியர்கள் அறிந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment