ஜூன் 21 - உலக யோகா தினம் (World Yoga Day):
யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு கலையாகும்.யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து,புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும்,உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை. சர்வதேச யோகா கூட்டமைப்பு 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உலக யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது.