ஏப்ரல் 5: தேசிய கடல்சார் தினம்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி மும்பையிலிருந்து லண்டனுக்குப் பயணித்தது. இதனை 1919இல் சிந்தியா கப்பல் கம்பெனி Scindia (Steam Navigation Company Ltd) முதல் பயணத்தைத் துவக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது.
அதனை நினைவுகூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் முறையாக கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.