தமிழ் எண் பணத்தாள்



தமிழ் எண் பணத்தாள்.

தமிழீழம் மலருமாயின் எம் நாட்டிலும் தமிழில் உள்ள பணத்தாள் மற்றும் அனைத்தும் தமிழைக் கூறும் வகையில் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் எமக்கென்று ஒரு நாடு இல்லாத போதில் தமிழர்கள் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் தமிழை வளர்பதற்க்காக வெளிநாடுகளிலும் தமிழீழத்திலும் பெரும் பாடு படுகின்றனர். அவ்வாறான ஒரு முயற்சியில் கிடைக்கபெற்ற தமிழர் பெருமை கொள்ளக்கூடிய ஒன்று மொரிசியசு என்ற நாட்டில் உபயோகத்தில் உள்ள பணத் தாள்களில் தமிழ் எழுத்துக்களும் தமிழ் இலக்கங்களும் அமையப் பெற்றுள்ளது. நீங்கள் இதுவரை பார்த்திராத தமிழ் எண்கள் உள்ள நாணயத் தாள்கள் 


இந் நாட்டில் 30000 தமிழர்களே வாழ்கின்றனர். அந் நாடு அவர்களுக்கான உரிமையை அளித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தழைக்கும் காலம் தூரம் இல்லை. தமிழன் எழும் நாள் தொலைவுமில்லை.
Next Post Previous Post