உடல் வளர்ச்சி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2 - உடல் வளர்ச்சி
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and
Pedagogy Paper 1,2
உடல் வளர்ச்சி
* உடல் வளர்ச்சி என்பது பல காலக்கட்டங்களை உள்ளடக்கியது.
* உடல் வளர்ச்சி உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல்
இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி
குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.
* நரம்பு மண்டல வளர்ச்சி: பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் மூன்று
அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறுகிறது. இதன் பின்னர் நரம்பு மண்டல
வளர்ச்சி மெதுவாக நடைபெறுகிறது.
* மூளை வளர்ச்சி பிறப்பு முதல் நான்கு வயதுவரை விரைவாகவும் அதன்
பின்னர் எட்டு வயதுவரை மிதமாகவும், பின்னர் பதினாறு வயதுவரை
மிதமாகவும் முன்னேற்றமடைந்து முழுமையடைகிறது.
* பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை 35 கிராம் ஆக உள்ளது. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1260 கிராம் முதல் 1400
கிராம் வரை உள்ளது.
* பிறக்கும்பொழுது கால் மடங்காகவும், ஒன்பதாவது மாதம் அரை
மடங்காகவும், இரண்டாவது வயதின் முடிவில் முக்கால் மடங்காகவும், நான்காவது வயதில் ஐந்தில் நான்கு மடங்காகவும், ஆறாவது வயதில் 90
விழுக்காடாகவும் மூளையின்
வளர்ச்சி உள்ளது.
* மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும்பொழுது அது 1/18 ஆகவும், பதினைந்தாவது வயதில் 1/30 ஆகவும், பருவமடையும் பொழுது 1/40 ஆகவும்
உள்ளது.
* குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது சுமார் 52 சென்டிமீட்டராகவும்,
ஐந்தாவது வயதில் 106 செ.மீ ஆகவும், ஒன்பதாவது வயதில் 131 செ.மீ ஆகவும், 13 வயதில் 151 செ.மீ ஆகவும் உள்ளது. ஆரம்ப நிலையில் உயரவளர்ச்சி
விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் உள்ளது.
* பெண் குழந்தைகளின் உயர வளர்ச்சி: ஆண் குழந்தைகளைவிட சற்றுக் குறைவாக உள்ளது. குழந்தைகளின் உயர வளர்ச்சியில் தனியாள் வேறுபாடு அதிகமாகவுள்ளது.
* சில
குழந்தைகள் உயரமாகவும் சில குழந்தைகள் குள்ளமாகவும் உள்ளனர். ஆறு அல்லது ஏழு
வயதில் உயரமாக உள்ள குழந்தை 15
அல்லது 16 வயதில் உயரமாக உள்ளனர்.
* பிள்ளைப் பருவமே கற்றலுக்கு ஏற்ற பருவம். உடல் வளர்ச்சி என்பது
உடலின் பெருக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. அதன் செயல்திறனையும் குறிக்கிறது.
* உடல் உறுப்புகளின் வளர்ச்சியுடன் கூடவே புலனியக்க வளர்ச்சியும்
நடைபெறுகிறது. குழவிப் பபுவத்திலே கேட்கும் திறன் முழு வளர்ச்சி நிலையை
எட்டுகிறது.