Search This Blog

ஜனவரி 8 சர்வதேச தட்டச்சு நாள் World Typing Day :

ஜனவரி 8 சர்வதேச தட்டச்சு நாள் World Typing Day :

ஆண்டுதோறும் ஜனவரி 8 ஆம் தேதி சர்வதேச தட்டச்சு நாள் கொண்டாடப்படுகிறது. தட்டச்சு இயந்திரத்தின் வேகம், துல்லியம், திறன் ஆகியனவற்றை கொண்டாடும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் டைப்பிஸ்ட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுவதுடன் உலகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலும் தட்டச்சுப் போட்டிகளும் நடக்கின்றன.

எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

தட்டச்சு இயந்திரமனாது 1868 ஆம் ஆண்டு கிறிஸ்டோஃபர் லாதம் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஷோல்ஸ் ஒரு பத்திரிகையாளர். பதிப்பாளரும் கூட. டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த இயந்திரத்தில் QWERTY கீபோர்டு லேஅவுட் தான் இருக்கிறது. 

QWERTY என்பது தட்டச்சு இயந்திரத்தின் கீபோர்டில் உள்ள முதல் 6 எழுத்துகளில் வரிசை. 

இது கீபோர்டின் இடதுபுறத்தின் மேலிருந்து ஆரம்பிக்கும்.
1880 ஆம் ஆண்டு தொடங்கியே டைப்ரைட்டர் இயந்திரத்தை பழம்பெரும் எழுத்தாளர்கள் பலரும் பயன்படுத்தியுள்ளனர். 

மார்க் ட்வைன், எர்னெஸ்ட் ஹெம்மிங்வே, இயன் ஃப்ளெமிங் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எழுத்தாளர்கள் மட்டும் தான் இந்த இயத்திரத்தைப் பயன்படுத்தினார்களா? என்றால் இல்லை. 

அரசு அதிகாரிகளுக்கு இது தவிர்க்க முடியாத இயந்திரமானது. காலம் செல்ல காலம் டைப்ரைட்ட இயந்திரமும் நவீனமானது. சிறியதாக அழகாக எளிதாகக் கையாளக்கூடியதாக ஆனது. இதனால் அதன் திறனும், வேகமும், துல்லியமும் அதிகரித்தது.


1935 ஆம் ஆண்டில், முதல் எலக்ட்ரிக் டைப்ரைட்டரை ஐபிஎம் உருவாக்கியது. 1964 ஆம் ஆண்டு அந்த எலக்ட்ரிக் டைப்ரைட்டர் இயந்திரத்தில் இன்னும் சில அம்சங்களைச் சேர்த்தது ஐபிஎம். 

அது தான் உலகின் முதல் வார்ட் ப்ராசஸர் ஆனது. 1980ல், டைப்ரைட்டர் இயந்திரத்தை மெல்ல மெல்ல கணினி இயந்திரம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டைப்ரைட்டர் இயந்திரம் தொடர்ந்து இன்றளவும் பலராலும் பரவலாக விரும்பப்படும் இயந்திரமாக இருக்கிறது.


டைபிங் இயந்திரம்:
சிலருக்கு வேகமாக தட்டச்சு செய்ய முடியும். உலகில் மிக வேகமான டைப்பிஸ்ட் ஒரு நிமிடத்தில் 216 வார்த்தைகளை டைப் செய்துள்ளார். 

இன்னொரு சுவாரஸ்யத் தகவலும் உள்ளது. பெண்கள் அதிகமானோர் டைப்ரைட்டிங் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஆண்கள் தான் மிக வேகமான டைப்பிஸ்ட்களாக உள்ளனர். 

ஆண்கள் சராசரியாக ஒரு நிமிடத்தில் 44 வார்த்தைகள் டைப் செய்யும் நிலையில், பெண்கள் சராசரியாக ஒரு நிமிடத்தில் 37 வார்த்தைகள் மட்டுமே டைப் செய்கின்றனர். தட்டச்சில் வேகம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு துல்லியமும் முக்கியமும். 

வாக்கியங்களை பிழையின்றி தட்டச்சு செய்ய வேண்டும். ஒரு சராசரியான டைப்பிஸ்ட் 100 வார்த்தைகளில் 8 தவறுகளை இழைக்கிறார் எனக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். 

தொழில்முறை டைப்பிஸ்ட்கள் 97% துல்லியமாக டைப் செய்கின்றனர்.

சர்வதேச தட்டச்சு நாளின் வரலாறு:
சர்வதேச தட்டச்சு தினம் மலேசியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2011ல் இருந்து இந்த நாளில் ஸ்பீட் டைப்பிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் வெற்றியாளர்கள் இடம் பெறுவார்கள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url