வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Vedic Culture in North India and Megalithic Culture in South India
வரலாறு
வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில்
பெருங்கற்காலப் பண்பாடும் Vedic Culture in North India and Megalithic Culture in South India
1. வேதகாலம் - இந்திய வரலாற்றில் கி.மு. (பொ.ஆ.மு) 1500-600 காலகட்டம். வேதங்கள் என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.
Vedic Age – It is a period in the History
of India between 1500 BC (BCE) – 600 BC
(BCE). It gets its name from four ‘Vedas’
2. நான்கு வேதங்கள் : ரிக், யஜுர், சாம, அதர்வண.
Four Vedas
1. Rig
2. Yajur
3. Sama
4. Atharva
3. இந்தியாவின் தேசிய குறிக்கோளான “சத்யமேவ ஜெயதே” (வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
National Motto “Satyameva Jayate” “(Truth
alone triumphs)” is taken from Mundaka Upanishad.
4. வேதகாலத்தின் இரண்டு கட்டங்கள் Classification of Vedic Age
தொடக்க(ரிக்) வேதகாலம் - கி.மு (பொ.ஆ.மு) 1500-1000
Early (Rig) Vedic Period 1500 – 1000 BC
(BCE)
பின்வேதகாலம் கி.மு (பொ.ஆ.மு) 1000-600
Later Vedic Period 1000 – c.600 BC
(BCE)
5. சபா - மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
Sabha - a council of elders.
சமிதி - மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு
Samiti - assembly of people.
6. பாலி - இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில்
1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.
Bali - a tax consisting of 1/6 of the
agricultural produce or cattle for a person.
7. ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் -Metals Known to Rig Vedic
People
தங்கம் (ஹிரண்யா), Gold (Hiranya)
இரும்பு (சியாமா), Iron (Shyama)
தாமிரம்/செம்பு (அயாஸ்) Copper/ Bronze (Ayas)
8. பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது
கிரேக்கச் சொல்லாகும். "Mega" என்றால் பெரிய, lith என்றால் 'கல்” என்று பொருள்.
இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம்
பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
The term ‘Megalith’ is derived from
Greek. ‘Megas’, means great and
‘lithos’ means stone. Using big stone
slabs built upon the places of burial is known
as Megalith.
9. தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்ட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்துள்ளது.
Periplus mentions the steel imported to Rome from Peninsular India was subjected to duty in the port of Alexandria.