துளசி செடியை சுற்றுவதன் காரணம் என்ன ? What is the reason for circling the basil plant?
துளசி செடியை சுற்றுவதன் காரணம் என்ன ?
துளசி..!!
பொதுவாகவே நம் அனைவரது வீட்டிலும், வீட்டின் நன்மைக்காக சில செடிகளை வளர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக நம் முன்னோர்கள் கட்டாயம் துளசி செடியை வளர்க்க வேண்டும் என கூறி, அதை வளர்த்தும், அதற்கு பூஜை செய்தும் வந்தார்கள்.
நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும், நிச்சயம் ஒரு நன்மையான காரணம் இருக்கும். துளசி செடியை வளர்க்க சொன்னதற்கான காரணம் என்ன?.. தெரிந்து கொள்வோம் வாங்க..!!
துளசி:
துளசி தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.
மகாவிஷ்ணுவிற்கு விருப்பமான இந்த துளசி செடியை, வீட்டில் வளர்த்து, வணங்குவதன் மூலம் மகாலட்சுமி தேவி தானாகவே நமது வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி எந்த வீட்டில் குடி கொள்கிறாளோ, அங்கு துன்பத்திற்கு இடம் இருக்காது. அனைத்து செல்வச் செழிப்புகளும் நிறைந்து காணப்படும்.
ஆகவே விடியற்காலையில் குளித்து முடித்து, துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு.
அறிவியல் காரணம்:
தாவரங்கள் எப்போதும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடும். அதிலும் துளசி செடியானது மற்ற தாவரங்களை விட அதிக அளவிலான ஆக்ஸிஜனை வெளியிடக் கூடியவை.
பொதுவாகவே அதிகாலை வேளையில் கிடைக்கும் ஆக்ஸிஜனானது மிகவும் தூய்மையானதாக இருக்கும். இந்நேரங்களில் துளசி செடியினை சுற்றி வரும்போது தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்கப்பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தூய்மையான ஆக்ஸிஜனை பெற தினமும் சிறிது நேரம் துளசி செடி அருகே நின்றால் போதுமே. எதற்கு துளசி மாடம் அமைத்து சுற்ற வேண்டும்? என்று நினைப்போம். ஆனால் இதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது, மனிதன் நிற்பதை விட, நடக்கும்போது மூச்சு இரைத்து அதிக காற்றை உள்ளிழுப்பான். அப்போது துளசி வெளியேற்றும் ஆக்ஸிஜனை சுவாசிப்பதால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
தற்போது துளசி செடியை வளர்க்கும் பழக்கமும், துளசி மாடத்தை சுற்றி வரும் பழக்கமும் குறைந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கட்டாயம் அனைவரும் துளசி செடியை வீட்டில் வளருங்கள். துளசி செடியை துளசி மாடத்தில் வைத்தோ அல்லது மண் தொட்டியில் வைத்தோ வளர்க்கலாம்.
அத்துடன் துளசி இலைகளை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும்.
துளசி தீர்த்தமும் உடலுக்கு மிகவும் நல்லது. அதனாலேயே இன்றளவும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி தீர்த்தத்தை வழங்கி வருகின்றனர்.