மாவட்டங்களின் சிறப்புகள் Specialties of Districts
மாவட்டங்களின் சிறப்புகள் Specialties of Districts
ஈரோடு - மஞ்சள் சந்தையும், காங்கேயம் காளையும் இங்கு சிறப்பு
மணப்பாறை - முறுக்கின் ருசியோ தனி
நாமக்கல் - முட்டைக்கும், லாரிக்கும் பெயர் பெற்றது
பள்ளிபாளையம் - சிக்கன் மணக்கும்
சேலம் - மாம்பழம், இரும்புக்கு பெயர் பெற்றது
திருநெல்வேலி - அல்வா சுவைக்கும்
திண்டுக்கல் - பூட்டுக்கும், பிரியாணிக்கும் தனி சிறப்பு
மாமல்லபுரம் - மனிதர்களை சிலையாக்கும் சிற்பங்கள்
நெய்வேலி - மின்சாரம் தரும் நிலக்கரி
கும்பகோணம் - செக்கச் செவேல் என்று சிவக்கும் வெற்றிலை
இராஜபாளையம் - தந்திரமான நாய்கள் பிறக்குமிடம்
ஊட்டி - வர்க்கிக்கு நிகர் எதுவும் இல்லை
ஊத்துக்குளி - வெண்ணெய்யின் ருசியே தனிதான்
பழநி - பஞ்சாமிர்தம் தித்திக்கும்
மதுரை - மல்லிகை பூவும், மரிக்கொழுந்தும் மணம் மயங்கவைக்கும்
திருவாரூர் - தேரோட்டம் கலகலக்கும்
திருப்பாச்சி - அரிவாள் பளபளக்கும்
மாயவரம் - சுவைமிக்க கருவாடு
சிவகாசி - பட்டாசு தெறிக்கும்
காஞ்சிபுரம் - பட்டு ஜொலிக்கும்
தூத்துக்குடி - உப்பு, துறைமுகம், முத்து
கரூர் - கொசுவலை, ஜவுளி, வாகனங்களின் உதிரி பாகம் தயாரிக்கும் இடம்
தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மையின் நடனம்
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டின் கண்கவர் காட்சி
விருதுநகர் - எண்ணெய் பரோட்டாவிற்கு அனைவரும் அடிமை
கொடைக்காணல் - பேரிக்காய் ருசியோ ருசி
திருவல்லிபுத்தூர் - பால்கோவா தித்திக்கும்
திருப்பூர் - பனியன் மென்மையாக இருக்கும்
பண்ருட்டி - பலாப்பழம் சுவையாக இருக்கும்
பொள்ளாச்சி - தேங்காய் பெரிதாக இருக்கும்
ஆற்காடு - பிரியாணி சுவைக்கு பஞ்சமில்லை
அரியலூர் - கொத்தமல்லி மணம் தூக்கும்