மே 10 - உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் World Lupus Day



மே 10 - உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் World Lupus Day


 உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் வருடம் தோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும், மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.



 

Next Post Previous Post