தன்வினை, பிறவினை, செய்வினை , செயப்பாட்டுவினை, பயன்பாட்டுத் தொடர்கள் - Tamil Grammar, தமிழ் இலக்கணம்
தொடர் இலக்கணம்:
* ஒரு தொடரில் எழுவாயு ம், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாகவும்
பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும்.
* பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.
* ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
* செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.
வினை வகைகள் - தன்வினை, பிறவினை:
* பந்து உருண்டது என்பது தன்வினை.
* உருட்டவைத்தா ன் என்பது பிறவினை.
* எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது
தன்வினை எனப்படும்.
* எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்
* எழுவாய் ஒரு வினையைச் செய்ய
வைத்தால் அது பிறவினை எனப்படும்
* தன்வினை
- அவன் திருந்தினான்
- அவர்கள் நன்றா கப் படித்தனர்
* பிறவினை:
- அவனைத் திருந்தச் செய்தான்
- தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்.
- பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்.
◆ செய்வினை செயப்பாட்டுவினை:
அப்பா சொன்னார் – செய்வினைத் தொடர்
* தோசை வைக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
* பாட்டு பாடுகிறாள் - செய்வினைத் தொடர்
* பாட்டு பாடப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
* ' படு ' என்னும் துணை வினைச்சொல் வினைத்தொடரில் செயப்பாட்டு சேர்ந்துவிடுகிறது .
* ' படு ' என்பதைப் போல , ' உண் , பெறு ' முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன .
* அவற்றைப் போலவே , எச்சங்களுடன் சேர்ந்து ஆயிற்று , போயிற்று , போனது ' முதலான துணை வினைகள் செயப்பாட்டுவினைகளை உருவாக்குகின்றன .
- கோவலன் கொலையுண்டான் .
- ஓவியம் குமரனால் வரையப்பட்டது .
- வீடு கட்டியாயிற்று .
- சட்டி உடைந்து போயிற்று .
- பணம் காணாமல் போனது .
பயன்பாட்டுத் தொடர்கள்:
* அப்துல் நேற்று வந்தான் - தன்வினைத் தொடர்
* அப்துல் நேற்று வருவித்தான் - பிறவினைத் தொடர்
* கவிதா உரை படித்தாள் - செய்வினைத் தொடர்
* உரை கவிதாவால் படிக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
* குமரன் மழையில் நனைந்தான் - உடன்பாட்டுவினைத் தொடர்
* குமரன் மழையில் நனையவில்லை - எதிர்மறைவினைத் தொடர்
* என் அண்ணன் நாளை வருவான் - செய்தித் தொடர்
* எவ்வளவு உயரமான மரம் ! - உணர்ச்சித் தொடர்
* உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? - வினாத் தொடர்
* பூக்களைப் பறிக்காதீர் - கட்டளைத் தொடர்
* இது நாற்காலி - பெயர்ப் பயனிலைத் தொடர்
* அவன் மாணவன் - பெயர்ப் பயனிலைத் தொடர்