சந்திர கிரகணம் | பெளர்ணமி: கிரகணத்தன்று கிரிவலம் போகலாமா? போகக்கூடாதா? சந்திர கிரகணம் புராணக்கதை...!!
சந்திர கிரகணம் புராணக்கதை...!!
ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும்போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது.
கிரகணம் என்பது சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ நம்மீது விழாமல் ஒரு மரம் நிழல் தருவது போன்ற சாதாரண நிகழ்வுதான் என்றாலும், அவை பெரும் பாதிப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தும் தீய நிகழ்வாக காலங்காலமாக கருதப்பட்டு வருகிறது.
சந்திர கிரகணம் :
பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வௌ;வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின்போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.
சந்திர கிரகணம் புராணக்கதை :
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்து விடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின்போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். மேலும் இறைவன் அருள் கிடைக்கும்.
சந்திர கிரகணத்தன்று கிரிவலம் போகலாமா?
2022ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஐப்பசி மாதம் 22ஆம் தேதி (08.11.2022) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
வரும் ஐப்பசி பௌர்ணமியன்று சந்திர கிரகணம் நிகழுவதால் கிரிவலம் போகலாமா? போகக்கூடாதா? என்று பெரும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.
கிரகண காலம் முடிந்த பின்பு பௌர்ணமி நாளான அன்று கிரிவலம் செல்லலாம். சந்திர கிரகணத்தின்போது உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கிரகண நேரத்தில் காயத்ரி மந்திரம் சொல்லலாம் :
யோகத்தை அதிகளவில் தரக்கூடியது என்பதால் சந்திர கிரகண நேரத்தில் நம் இறைவனின் திருநாமத்தை ஜெபித்து வந்தால் நம் பாவங்கள் நீங்கப்பெறும்.
ஓம் பூர்: புவ: ஸஷுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்..!
இல்லை என்றால் 'ஓம் நமோ நாராயணா", ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.