Science Box questions, Do you know, 10th std - physics
10 ஆம் வகுப்பு
2. ஒளியியல்
1. மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை கூழ்மம் என்கிறோம்.
எ.கா. பால், புகை, ஐஸ்கீரீம் மற்றும் கலங்கலான நீர்.
2. லென்சு சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை மெல்லிய
லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. தடிமனான லென்சுகளுக்கு இவ்விரு சமன்பாடுகளும் சிறிய மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
10 ஆம் வகுப்பு
4. மின்னோட்டவியல்
1. நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும் இதன் மதிப்பு
1.5 ×10⁻⁶ 𝜴m எனவே இது மின் சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும்
சாதனங்களில் பயன்படுகிறது.
2. குதிரை திறன்: குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு
முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1குதிரை திறன் என்பது 746
வாட் ஆகும்.
3. இந்தியாவில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 220/230 வோல்ட் மின்னழுத்தமும், 50 Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்படுகிறது.
4. USA மற்றும் UK போன்ற நாடுகளில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 110/120 வோல்ட் மின்னழுத்தமும் 60 Hz அதிர்வண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.
10 ஆம் வகுப்பு
5. ஒலியியல்
1. கோல்கொண்டா கோட்டை (ஹைதராபாத், தெலங்கானா) - கோல்கொண்டா கோட்டையிலுள்ள கைத்தட்டும் அறையின் மேற்புறம் பல தொடர்ச்சியான வளைவுகள்
உள்ளன. இதில் ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும். எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்டத் தொலைவிற்குக் கேட்கிறது.
2. மெதுவாகப் பேசும் கூடம்
மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது. அந்த அறையில் ஒரு குறிப்பிட்ட
பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில்
நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
3. அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?
★ ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்தற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன்
ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்).
★ ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடா்மிகு ஊடகம் ஆகும் (நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும்).
10 ஆம் வகுப்பு
6. அணுக்கரு இயற்பியல்
1. இதுவரையில் 29 கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் ( Rare earth metals) இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன.
2. யுரேனஸ் கோள் பெயரிட்டப் பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து யுரேனியத்தை ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின்
கிலாபிராத் கண்டறிந்தார்.
3. எலக்ட்ரான் வோல்ட்
◆ அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் (eV) ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப்
பயன்படுத்தி முடுக்குவிக்கப்படும் ஒர் எலக்ட்ரானின் ஆற்றலாகும்.
1eV= 1.602 × 10⁻¹⁹ ஜுல்
1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் =1MeV= 10⁶ eV (மெகா எலக்ட்ரான் வோல்ட்)
அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் 200 MeV
4. இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது யுரேனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும். அதனைத் தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Far man என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும்.
5. இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் நேர்மின்சுமைக் கொண்டிருப்பதால்
நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்போது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும். உயர் வெப்பநிலையின் (அதாவது 10⁷ முதல் 10⁹K” என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது.
6. ஒவ்வொரு வினாடியிலும் 620 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு சூரியனில் நடைபெறுகிறது. ஒரு வினாடியில் 3.8 × 10²⁶ ஜுல் ஆற்றல் கதிரியக்கமாக வெளியாகிறது. கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி
வரும்போது படிப்படியாகக் குறைகிறது. பூமியை அடையும்போது ஒரு வினாடியில், ஓரலகுப் பரப்பில் இதன் மதிப்பு 1.4 கிலோ ஜுல் ஆகும்.
7. நமது பூமியின் வயது என்னவென்று தெரியுமா? - தோராயமாக 4.54 × 10 ⁹ ) ஆண்டுகள்அதாவது 45 கோடியே 40 இலட்சம் ஆண்டுகள்)
8. அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் டோசிமீட்டர் ஆகும்.
அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியவும் மருத்துவ நிழலுரு தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. X
மற்றும் காமா 𝛄 கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோடசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்கவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.
10 ஆம் வகுப்பு
7. அணுக்களும் மூலக்கூறுகளும்
1. ஒப்புஅணுநிறை என்பது ஒரு விகிதம், எனவே அதற்கு அலகு இல்லை. ஒரு தனிமத்தின்
அணு நிறையை கிராமில் குறிப்பிடுவதாகக் கொண்டால் அதற்கு “கிராம் அணுநிறை” என்று பெயர்.
ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை -1கி
கார்பனின் கிராம் அணு நிறை - 12 கி
நைட்ரஜனின் கிராம் அணு நிறை - 14 கி
ஆக்சிஜனின் கிராம் அணு நிறை - 16 கி
2. ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு விகிதம். எனவே அதற்கு. அலகு இல்லை. ஒரு சேர்மத்தின் மூலக்கூறு நிறையை கிராமில் குறிப்பிடுவதாகக் கொண்டால் அதற்கு கிராம்
மூலக்கூறுநிறை என்று பெயர்.
நீரின் கிராம் மூலக்கூறு நிறை - 18 கி
CO₂, ன் கிராம் மூலக்கறு நிறை - 44 கி
NH₃ ன் கிராம் மூலக்கூறு நிறை - 17கி
HCL ன் கிராம் மூலக்கூறு நிறை - 36.5 கி