Search This Blog

Science Box questions 7th STD term -II | unit 1 வெப்பம்‌ மற்றும்‌ வெப்பநிலை

7ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
1. வெப்பம்‌ மற்றும்‌ வெப்பநிலை

1. மனிதர்கள்‌ வெவ்வேறு உடல்‌ வெப்பநிலையினை பெற்றுள்ள போதிலும்‌ அவர்களின்‌ சராசரி உடல்‌ வெப்பநிலை 37°C (98.6°F) ஆகும்‌. மேலும்‌ ஒவ்வொருவரும்‌ ஒரே மதிப்பிலான
வெப்பநிலையினை நாள்‌ முழுவதும்‌ பெற்று இருப்பதில்லை. நாம்‌ செய்யும்‌
வேலைகளுக்கு ஏற்பவும்‌ புற சூழலுக்கு ஏற்றாற்‌ போலவும்‌ நமது உடல்‌ வெப்பநிலையானது நாள்‌ முழுவதும்‌ சிறிது உயர்வதும்‌ தாழ்வதுமாக உள்ளது.

2. பெரும சிறும வெப்பநிலைமானி - ஒரு நாளின்‌ அதிகபட்ச மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்‌ பயன்படும்‌ வெப்பநிலைமானியானது பெரும சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

3. பாரன்ஹீட்‌ அளவீட்டிற்கும்‌ செல்சியஸ்‌ அளவீட்டிற்கும்‌ உள்ள கொடர்பும்‌, கெல்வின்‌
அளவீட்டிற்கும்‌ செல்சியஸ்‌ அளவீட்டிற்கும்‌ உள்ள தொடர்பும்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



4. உலகின்‌ பெரும்பான்மையான மனிதர்கள்‌ அன்றாட வாழ்வில்‌ வெப்பநிலைகளை அளக்க செல்சியஸ்‌ அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர்‌.

5. கெல்வின்‌ அளவீட்டு முறையானது தனிச்சுழி அளவீட்டு முறை மட்டும்‌ அல்ல. 1°C வெப்பநிலை மாற்றம்‌ ஏற்பட்டால்‌ 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும்‌ வகையில்‌ கெல்வின்‌  அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ்‌ அளவீட்டுடன்‌ கூட்டுவதன்‌ மூலமாகவோ அல்லது கழிப்பதன்‌ மூலமாகவோ நாம்‌ மிக எளிமையாக செல்சியஸ்‌ அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு (கெல்வின்‌) முறைக்கு மாற்றிக்கொள்ள இயலும்‌.

6. ஆனால்‌ ஐக்கிய அமெரிக்க நாடுகளில்‌ பாரன்ஹீட்‌ அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர்‌. பாரன்ஹீட்‌ அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்‌) அளவீட்டு
முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லை.

* இதனை சரிசெய்ய அவர்கள்‌ ரான்கீன்‌ அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர்‌. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின்‌ பொறியியலாளர்‌ மற்றும்‌ இயற்பியலாளரான
ரான்கீன்‌ 1859 ஆம்‌ ஆண்டு இம்முறையினை அறிமுகப்படுத்தினார்‌. இது தனிச்சுழி
அளவீட்டு முறையாகும்‌.

* மேலும்‌ 1°Rல்‌ ஏற்படும்‌ மாற்றம்‌ 1°F க்கு சமமாகும்‌ வகையில்‌
வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பாரன்ஹீட்‌ அளவீட்டு முறையினை
பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால்‌ அவர்கள்‌ R=F+459.67 என்ற வாய்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன்‌ முறைக்கு மதிப்பினை
எளிமையாக மாற்றிக்கொள்ள இயலும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url