Science Box questions 6th STD term -II | unit 2,3,4
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
2. மின்னியல்
1. ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இவை மின்னதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களது உணவைப் பிடிக்கவும் செய்கின்றன.
2. அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும். இக்கருவியானது சுற்றில் தொடரிணைப்பில் இணைக்கப்பட வேண்டும்.
3. தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். இவர் 1000 க்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் பல வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை. மின் விளக்கைக்
கண்டுபிடித்ததற்காக நாம் என்றும் அவரைப் போற்றுகிறோம்.
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
1. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். எ.கா. கற்பூரம்.
2. நீர் ஒரு பொதுக் கரைப்பான். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
4. காற்று
1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையைக் கண்டறிய காற்றுத்திசைகாட்டி
பயன்படுகிறது.
2. காற்றில் ஏறத்தாழ 30 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.
3. கார்பன்டை-ஆக்சைடை -57°C க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை
அடையாமல், நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர்பனிக்கட்டி
என்றழைக்கின்றனர். இது குளிர்விக்கும் காரணியாகப் பயன்படுகின்றது.
4. இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவற்றை சரக்குந்து மற்றும் சரக்குப் பெட்டிகளில் ஏற்றுமதி செய்யும் பொழுது, அப்பொருள்களைப் பதப்படுத்த உலர்பனிக்கட்டியைப்
பயன்படுத்துகின்றனர்.