பெட்ரோலின் வரலாறு (History of Petrol)
பெட்ரோலின் வரலாறு (History of Petrol)
பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்பட்டு 150 வருடங்கள் தான் ஆகிறது. ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற டிரேக் என்ற அமெரிக்கர் தான் உலகின் முதல் எண்ணெய்க் கிணறு உரிமையாளர்.
டிரேக் ஒரு முறை தனது கிராமத்தில் கிணறு தோண்ட பூமியை துளைத்துக் கொண்டு இருக்க அதில் இருந்து பிசுக்கான கரிய பொருள் ஒன்று குபு, குபு வென்று வெளியே வந்தது. அந்தக் கரிய பொருளின் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆராய ராக்ஃபெல்லரை அனுப்பி வைத்தது அமெரிக்க வங்கி. ஆனால் ராக்ஃபெல்லர் அது எதற்கும் பயன்படாத ஒரு பொருள் என்று எண்ணினார். அப்படியே இதே கருத்தை வங்கிக்கும் தெரிவித்தார். மோட்டார் கார்கள் கண்டு பிடிக்கப்படும் வரையில் பெட்ரோல் கொண்டு விளக்கையும், அடுப்பையும் தான் எரித்து வந்தனர். அதன் பிறகு தான் உலகத்திற்கு விஷயம் புரிந்தது.
அன்று பெட்ரோலை தேவை இல்லாத பொருளாகக் கருதிய ராக்ஃபெல்லர் பிற்காலத்தில் எண்ணற்ற பெட்ரோல் கிணறுகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்தார்.
அக்காலத்தில் பூமியில் இருந்து எண்ணெய் வெளிப்படும் சமயத்தில் பீறிட்டுக் கொண்டு வரும். அதைக் கட்டுப்படுத்த அப்போது தெரிந்திருக்க வில்லை. அதனால் 1901 ஆம் ஆண்டு வரையில் 15 கோடி லிட்டர் பெட்ரோல் வீணான கதையும் உண்டு. இப்போது நமது பூமியில் இருக்கும் எண்ணெய் வளம் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும்.