டோங்கா எரிமலைச் சாம்பல்
🌟 டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ள%2Bம் (Plume) எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது.
🌟 வானிலை செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்யும் பிரிட்டன் விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 55 கிமீ உயரம் வரை இந்தச் சாம்பல் மேகம் சென்றிருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர்.
🌟 இது வளிமண்டலத்தில் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மீசோஸ்பியர் அடுக்குகளின் எல்லைப் பகுதியாகும்.
என்னென்ன செயற்கைக்கோள்களின் தரவுகள் பயன்படுத்தப்பட்டது?
🌻 டோங்காவின் ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாப்பாய் (Hunga Tonga-Hunga Haapai) எரிமலையில் இருந்து எழுந்த சாம்பல் மேகத்தின் உயரத்தைக் கண்டறிய ஹிமாவாரி-8 (ஜப்பான்) GOES-17 (USA), GK2A (கொரியா) ஆகிய மூன்று வானிலை செயற்கைக்கோள்களின் தரவு பயன்படுத்தப்பட்டது.
🌻 அவை அனைத்தும் வௌ;வேறு தீர்க்கரேகைகளில் இருப்பதால் அவற்றின் தரவுகள் மூலம் சாம்பல் மேக உயரத்தைக் கண்டறியலாம். புயல் மேகங்களைக் கண்டறிவதில் இது நம்பகமான தொழில்நுட்பமாகும்.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
🌼 இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட அணுகுண்டைப் போல டோங்கா எரிமலை வெடிப்பு 500 மடங்கு சக்தி வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதில் வெளிப்பட்ட ஆற்றல் 10 மெகா டன் டிஎன்டியின் வெடிப்புக்குச் சமம் என அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
எரிமலை வெடிப்புக் குறியீடு :
🌷 Volcanic Explosivity Index (VEI) எனப்படும் எரிமலை வெடிப்புக் குறியீட்டில் டோங்கா எரிமலை வெடிப்பு ஐந்துக்கும் அதிகமாக அளவிடப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப தரவுகள் கூறுகின்றன.
🌷 பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பூமியின் சராசரி வெப்பநிலையை அரை டிகிரி குறைத்தது. 15 மில்லியன் டன் கந்தக டை ஆக்சைடை (Sulfur dioxide) வளிமண்டலத்தில் அடித்ததன் மூலம் இதைச் செய்தது. கந்தக டை ஆக்சைடு தண்ணீருடன் இணைந்து சிறிய நீர்த்துளிகளை உருவாக்குகின்றன. இவை பூமியை நோக்கி வரும் சூரிய கதிர்வீச்சை திருப்பி அனுப்புகின்றன.