அறிந்து கொள்வோம்
பொது அறிவு தகவல்கள்....!!
🌟 ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
🐦 பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
🐅 வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
👃 மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வௌ;வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
🦋 ஒவ்வொரு உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
🌞 சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
🐸 தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
🍙 உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
👀 ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
🐝 தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
👮 முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர்.ராதாகிருஷ்ணன்.
👳 ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே.நாயர்.
🗻 உலக சிகரங்களில் மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.
📮 தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
🌏 செவ்வாய்க்கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.