மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் கோலம் இட்டு, நடுவில் சாணம் வைத்து , அதில், பறங்கி பூவை வைப்பது நம் வழக்கம்.அது ஏன் தெரியுமா?
இன்று மார்கழி ஆரம்பம்
மார்கழி கோலம் மகத்துவம் பற்றி் தெரிந்து கொள்ளுங்கள்:
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.
அந்த வரிசையில் மார்கழி மாதம் என்றால் அழகிய கோலம் தான் சிறப்பு.
இந்த மாதத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விதவிதமான கோலங்கள் அணி வகுத்து பார்க்க அழகாய் காட்சியளிக்கும்.
வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன.
ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும்
ஏன் கோலமிட்டு
வீட்டை சிறப்பு செய்கிறார்கள் ,
மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்? என்பது பற்றி பெண்கள் சிலரிடம் கேட்டோம்.
“மார்கழி மாதம் முழுவதும் பீடை நாட்கள் (கெட்ட நாள்) என்பார்கள்.
இந்த மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடைபெறாது.
ஆதலால், இந்த பீடை நாட்கள் நீங்குவதற்க்காக அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீடுகளில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடவேண்டும்.
அதிகாலை நேரங்களில் வீட்டில் விளக்கு எரியவேண்டும்.
வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.
அதிகாலை 4 மணிக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் இடவேண்டும்.
அதில் சில சம்பிரதாயங்கள் உள்ளன.
வாசலில் ஒரு திசையை நோக்கி தண்ணீர் தெளிக்கும் போது, பாத்திரத்தில் உள்ள நீர் தீர்ந்த பிறகு தான், மறுதிசையில் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க வேண்டும்.
குறை நீருடன் மறுதிசையில் தண்ணீர் தெளிக்கக் கூடாது.
இந்த சம்பிரதாயத்தை இன்றும் நாங்கள் கடைபிடிக்கிறோம்” என்றார் ஒரு பெண்மணி.
மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலமிட்டிருப்பார்கள்.
கோலம் இட்டு முடித்ததும், அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச்சாணம் வைத்து, அதில் பறங்கிப் பூ வைக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் , வீட்டு வாசலில் கோலம் இட்டு, நடுவில்சாணம் வைத்து , அதில் பறங்கி பூவை வைப்பது நம் வழக்கம்.
அது ஏன் தெரியுமா?
மஞ்சள் நிறத்தில் பறங்கிப்பூ இருப்பதால் , அதை வைக்கும் வீட்டில் , மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது நம்பிக்கை.
பூ மலர்ந்து இருப்பதால் அது பொல் , வீட்டில் உள்ளவர்கள்
சந்தோஷமா இருப்பாங்க.
மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்பதால் , வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் தரும்.
கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” சொல்றாரு.
அப்படி என்றால் அதை ஏன் நல்ல மாதம் இல்லை பீடை மாதம் என்று சொல்கிறார்கள் கேக்கலாம்.
அது பீடை மாதம் இல்ல…
பீடுடைய மாதம் (அதாவது செல்வம் நிறைந்த மாசம்) என்பது தான் கொஞ்சம் கொஞ்சமாக மருவி பீடை மாதம்னு ஆகிடுச்சாம்.
நம்மோட சம்பிரதாயப்படி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் கல்யாணம் வேற பல சுப நிகழ்ச்சிகள் நடப்பது இல்ல.
காரணம் என்ன என்றால் இந்த மாதம் எல்லாம் முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்கு என்று ஒதுக்கப்படவேண்டிய மாதங்களாம்
அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்ததாம்.
மார்கழி மாதங்கறது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாம்.
விடியற்காலை அப்படி என்றால் மங்களகரமானது.
அதனாலதான் மாதம் முழுக்க இறை வழிபாட்டுக்கு என்று பெரியோர்கள் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
இந்த மாதத்தில், சுபநிகழ்ச்சி நடத்தினால் , வழிபாடு பாதிக்கும் என்பதால், இந்த மாதத்தில் விசேஷம் எதையும் நடத்துவதில்லையாம்.
மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வாங்களாம். “மார்கம்” என்றால் வழி, “சீர்ஷம்” என்றால் உயர்ந்த. “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்று அர்த்தமாம்.
வருஷத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு போக முடியாதவங்க இந்த மார்கழி மாதத்தில் மட்டும் கோவிலுக்கு சென்ற வருஷம் முழுசும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்குமாம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு
அறிவியல் காரணமும் உண்டு.
மார்கழி மாதத்தில் அதிகாலைல
சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்க முடியும்.
இது புத்துணர்ச்சி தரும்.
மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
கோலம் போடுவதால் பாட்டு பாடுவதால் மனசு ஒருமை படுத்த முடியும்.
இம்மாதத்தில் அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கின்றன.
வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டுக்கு நல்லது என்கிறார்கள்.
அரிசி மாவால் கோலம் போடுவதால் எறும்பு,குருவி மாதிரி ஜீவராசிகள் அதை சாப்பிட்டு வாழும்.
புண்ணியமும் கிடைக்கும்.