தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?



இந்து சமயத்தில் தீபாவளி:

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம்: 

புராணக் கதைகளின் படி,
மாயோனின் இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். பிறந்த அசுரனின் பெயர் நரகாசுரன் ஆகும். அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். அந்நரகாசுரன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்த
நரகாசுரனை இறக்க வைக்கிறான். 

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராம அவதாரம் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்  :

இராமாயண இதிகாசத்தில், இராமர் ,
இராவணனை அழித்து விட்டு, தனது 14 வருட  வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.

https://ta.wikipedia.org/wiki/தீபாவளி
Next Post Previous Post