Search This Blog

முந்திரியை அறிமுகப்படுத்திய வணிகர்கள்!

முந்திரி:
தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடென்டேல் (Anacardium occidentale)
ஆங்கிலப் பெயர்: காஷ்யூ (Cashew)
தாயகம்: பிரேசில்

முந்திரி

இனிப்பு பொருளான லட்டில், ஏலக்காய் மற்றும் முந்திரி இருக்கிறது என அறிவீர்கள். எது நம் கண்ணில் முதலில் தெரியும்? முந்திரிதான். லட்டு பங்கீட்டில் பூந்தியை விட்டுத்தருபவர்கள்கூட, முந்திரியை விடமாட்டார்கள்.
இதற்காக நாம் போர்ச்சுகல்காரர்களுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும். எதற்குத் தெரியுமா? கி.பி.1578ஆம் ஆண்டு, அவர்கள்தான் நமக்கு முந்திரியை அறிமுகம் செய்தார்கள். போர்ச்சுகல் மொழியில் 'காஜூ' என்று இதற்குப் பெயர். ஆங்கிலேயர்கள் அவர்களுடைய வசதிக்கு 'காஷ்யூ' என்று அழைத்தார்கள்.
ஆனால், இந்தியர்களாகிய நாம், இன்று வரை, காஜூ கத்திலி, காஜூ கேக் என, போர்ச்சுகல் மொழியில்தான் அழைத்து வருகிறோம்.
கோவா துறைமுகத்திற்கு முதன்முதலில் முந்திரி வந்த பின்னரே, கொச்சி பகுதித் தோட்டங்களில் இவை பயிரிடப்பட்டன. கேரளத்தின் கொச்சி பகுதி, போர்ச்சுகலின் சமஸ்தானம் என்று சொல்லலாம்.
அவர்கள் ஆண்டபோது, காடுகளை அழித்து, முந்திரித் தோட்டங்களாக மாற்றியதாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். போர்ச்சுகீசியர்கள், முந்திரிப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்களாம். அதேபோல், 'ஃபெனி' (Feni) என்ற வித்தியாசமான பானமும் தயார்செய்து பருகியிருக்கிறார்கள்.
நம்முடைய உடலின் சிறுநீரக வடிவில் உள்ள இந்தப் பழத்திற்கு மேல் தான் அதன் கொட்டை இருக்கிறது. இந்தக் கொட்டையில் இருந்து எடுக்கப்படுவதுதான், நாம் சாப்பிடும் முந்திரிப் பருப்பு. கேரளத்தில் 'கஷூ வண்டி என்று அழைக்கப்படுகிறது.
முந்திரி, கோவாவிலிருந்து கேரளத்திற்குச் சென்றதால், முந்திரிப்பழம் அங்கே “கொமாங்கா” என்று அழைக்கப்படுகிறது. முந்திரிகளில் ஏகப்பட்ட ரகங்கள் உண்டு. போர்ச்சுகல் நாட்டினர்தான் நமக்கு மிளகாயையும், முந்திரியையும் கொடுத்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url