அக்டோபர் – 15 சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural Women):
விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும்,
வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர்.
ஐ.நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.