Search This Blog

அக்டோபர் 10 - உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty):

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு
என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது.
பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை.
குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது.
தீர்மானம்:
2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய "மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு" என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url