செப்டம்பர் 22 புற்றுநோய் ரோஜா தினம் :
புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவே அவர் இறந்த தினத்தை புற்றுநோய் ரோஜா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதன்மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு மனஉறுதி ஏற்படுகிறது.