சட்டையில் இந்த லூப் எதற்கு தரப்பட்டுள்ளது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?
சில வகை ஷர்ட்டுகளில் மட்டும் நீங்கள் இந்த லூஸ் ஹோல் கண்டிருக்க வாயப்புகள் உண்டு. இது எதற்காக இருக்கிறது என்று நீங்கள் என்றேனும் யோசித்தது உண்டா?
நம்மில் பெரும்பாலானோர் இதை டிசைன் அல்லது ஃபேஷன் என்று நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.
ஆனால், சட்டையின் பின்புறத்தில் அமைந்திருக்கும் இந்த லூப் ஹோல் ஓர் காரணத்திற்காக தான் 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்டது என ஓர் சுவாரஸ்யமான காரணமும் இருக்கிறது...
இந்த வகை சட்டைகளை 1960-களில் அமெரிக்க உடை தயாரிப்பு ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்தது. இந்த லூப் ஹோலை லாக்கர் லூப், ஃபேரி லூப் மற்றும் ஃப்ரூட் லூப் என்றும் கூறுகின்றனர்.
பெண்கள், இதை விளையாட்டு பொருளாக கருதி இழுத்து, இழுத்து விளையாடுவதும் உண்டு. சில சமயங்களில் எங்கேனும் சிக்கி அதன் காரணமாக சட்டை கிழியவும் வாய்புகள் இருக்கின்றன.
பல்வேறு பிராண்டு சட்டைகளில் இந்த லூப் ஹோல் பின் பகுதியில் அமைந்திருக்கும். இது, ஸ்டைல் அல்லது டிசைன்காக அமைக்கப்படவில்லை. ஒருமுறை நீங்கள் கழற்றி மாட்டினாலோ அல்லது துவைத்து இஸ்திரி செய்து வைத்தாலோ சட்டை கசங்காமல் இருக்க அமுக்கமாக லாக்கர் அல்லது ஹேங்கரில் மாட்டி வைக்க தான் இந்த லூப் ஹோல் சட்டையில் இணைக்கப்பட்டது.
ஆனால், இதன் நோக்கம் எதற்கென தெரியாமலேயே நம்மில் பலர் இந்த வகை சட்டைகளை வாங்கி அணிந்து வருகிறோம்.