Search This Blog

மைக்ரோ மின்விசிறி

 

மைக்ரோ மின்விசிறி


                 
                 நம் வாழ்வில் பயன்படும் மின்சாதனப் பொருட்களில் மிகவும் அத்தியாவசியமானது மின் விளக்கு, மின் விசிறி. இவை இரண்டும் இல்லாத வீடுகளே கிடையாது.  இன்று நவீன ரக செல்பேசி முதல் டப்லட் வரை மிகச்சிறிய அளவினாலான மின்விசிறிகள் வந்துவிட்டன.
தைவான் நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் ஹோங் (Alex Horng) என்பவர் மின்விசிறிகள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை தைவானின் நியூ தைபே நகரில் நடத்தி வந்தார். 1989-ஆம் ஆண்டில் அவரது வீட்டில் வளர்த்த கிளிகள் கோடைக்காலங்களில் வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதைக் கண்டு வருந்தி அதற்குத் தீர்வு தேடினார்.
நாம் கோடையில் மின் விசிறி பயன்படுத்துவதுபோல் கிளிக்கூண்டிற்கு மிதமான காற்றை வீசும் விரல் நுனி அளவிலான சிறிய ரக மின் விசிறியைச் செய்து பொருத்தினார். கணினிகள் புதிதாக வந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிந்தனை பிறந்தது. எதிர்காலத்தில் சிறிய அளவில் கணினிகள் வந்துவிடும்.


அலக்ஸ் ஹோங்

                அதற்குச் சிறிய அளவிலான மின்விசிறிகள் தேவைப்படுமே என்ற முற்போக்குச் சிந்தனையில் அவர் செய்த மிகச் சிறிய அளவிலான மின் விசிறியை அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்தினார், அப்போது அனைவருமே இவரது கண்டுபிடிப்பைப் பார்த்து நகைத்தனர். இதனால் மெழுகுவர்த்தியைக்கூட அணைக்க முடியாது என்று கிண்டல் செய்தனர்.
மனம் தளராத அலக்ஸ். தன்னுடைய சிறிய அளவிலான கடையை விரிவுபடுத்தி சிறிய ரக மின்விசிறி பற்றிய முழு நேர ஆய்வைத் தொடங்கினார். 1992ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சுனோன் (Sunon) நிறுவனம் முதன்முதலாக சிறிய ரக மின்விசிறி பற்றிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது.
               
                  இதை அறிந்த அலக்ஸ், தான் கண்டுபிடித்த மின்விசிறி பற்றிய விவரங்களையும் தனது எதிர்காலத் திட்டத்தையும் சுனோன் நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.  அலக்ஸின் கண்டுபிடிப்பைக் கண்டு வியந்த சுனோன் நிறுவனம், உடனடியாக (1993) அமெரிக்காவிற்கு வரவழைத்து அவரிடம் சில மாதிரிகளைச் செய்துகாட்டுமாறு கேட்டுக் கொண்டது.

 

                  இவரின் புதிய கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க நிறுவனம் ஆதரவு தந்து அதிக எண்ணிக்கையில் சிறிய ரக மின்விசிறிகள் தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டது. மீண்டும் தைவான் வந்த அலக்ஸ், சுனோன் தைவான் என்ற பெயரில் சிறிய ரக மின்விசிறிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
சில வருடங்களில் அவரது கண்டுபிடிப்பு உலக அளவில் பிரபலமாக, 1998ஆம் ஆண்டு சென்சியான் ஹீச்ஹொக் டெக்னாலஜி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது தைவானில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அந்த நிறுவனம் திகழ்ந்தது. தனக்கு ஆதரவு தந்த சுனோன் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் 2005-ஆம் ஆண்டு விலைகொடுத்து வாங்கிவிட்டார். இதன் மூலம் அவர் சுனோன் நிறுவனத்தின் தலைவரானார்.
               
                    இன்று நமது பையில் உள்ள செல்பேசி, டப்லட்  இரவு பகலாக இயங்கிக்கொண்டு இருந்த போதிலும் அது சூடாகாமல் இருப்பதற்கு அலக்ஸ் ஹோங் கண்டுபிடித்த மைக்ரோ மின்விசிறிகள்தான் காரணம்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url