Search This Blog

ஜூன் 21 - உலக யோகா தினம் (World Yoga Day):

பன்னாட்டு யோகா நாள் ( International Yoga Day) ஆண்டுதோறும்
சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு
கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா , சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url