ஜூன் 1- உலக பால் தினம் (World Milk Day):
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கழகம் [Food and Agriculture Organization (FAO)] 2001-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் உலக பால் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்க படுகிறது.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால் . தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது.
இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.