மே – 8 உலக தாலசீமியா நோய் தினம் (World Thalassemia Day):
தாலசீமியா என்கிற
நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த
சோகை. தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக
இருக்கும்.
இதனால்
சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில்
இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 8 அன்று இத்தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.