Search This Blog

மே – 12 சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day)


உலக செவிலியர் நாள் ( International Nurses Day ) உலக நாடுகள் அனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
 செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவு கூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பின்னணி:
உலக செவிலியர் அமைப்பு ( International Council of Nurses ) இந்நாளை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.

1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் ( Dorothy Sutherland ) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

ஜனவரி 1974 இல் , நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url