ஜனவரி 24 - தேசிய பெண் குழந்தைகள் தினம் :
இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1996ஆம் ஆண்டு ஜனவர 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து இத்தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை , சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.
மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது .
பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம்:
மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது .
பாலின சமநிலை மேம்படுத்துவது .
பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது .