செப்டம்பர் 18 - உலக மூங்கில் தினம்:

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.

இயற்கை, இந்தியாவிற்கு கொடுத்த கொடை 'மூங்கில்". இதை மத்திய அரசாங்கம் 'தேசிய மூங்கில் இயக்கம்" என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.

Next Post Previous Post