செப்டம்பர் 15 - தேசிய பொறியாளர்கள் தினம்:
உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப் பெயர், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், இந்தியாவின் பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க நீர்த்தேக்கத்தில் வெள்ளத் தடுப்பு அமைப்புமுறையை உருவாக்கினார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்க அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் காவிரியின் குறுக்கே கட்டினார்.