உலக எய்ட்ஸ் தினம்:
உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் மேற்கொள்ளப்படுகிறது.
இத்தினம் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது.
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.