டிசம்பர் 1- உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day)
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். இது எச்.ஐ.வி.
(HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே
1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.