Search This Blog

பாரதியார்‌ - Bharathiyar - 6th to 12th new book

பாரதியார்‌



8th தமிழ்மொழி வாழ்த்து (பாரதியார்‌)


1. பாரதியாரின்‌ பன்முக ஆற்றல்‌ யாவை? 
கவிஞர்‌, எழுத்தாளர்‌, இதழாளர்‌, சமூகச்‌, சீர்த்தச்‌
சிந்தனையாளர்‌, விடுதலைப்‌ போராட்ட வீரர்‌

2. பாரதியார்‌ நடத்திய இதழ்கள்‌ எவை? 
இந்தியா, விஜயா

3.பாரதிதாசன்‌ பாரதியாரை எவ்வாறெல்லாம்‌ புகழ்ந்துள்ளார்‌? 
சிந்துக்குத்‌ தந்தை, செந்தமிழ்த்‌
தேனீ, புதிய அறம்‌ பாட வந்த அறிஞன்‌, மறம்‌ பாட வந்த மறவன்‌

4. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர்கிறது?
 பொருந்தாத பழைய கருத்துகளால்‌ உண்டாகும்‌
துன்பங்கள்‌ நீங்கி ஒளிர்கிறது

5. எந்த இருள்‌ நீங்கட்டும்‌ என பாரதியார்‌ கூறுகிறார்‌?
 எங்கும்‌ உள்ள அறியாமை இருள்‌ நீங்கட்டும்‌.

6. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும்‌ என பாரதியார்‌ கூறுகிறார்‌?
 தமிழ்மொழி மேன்மையுற்று உலகம்‌ முழுவது சிறப்படைய வேண்டும்‌

7. பாரதியார்‌? சந்திரிகையின்‌ கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும்‌, வசனக்‌ கவிதைகளையும்‌ உள்ளிட்ட உரைநடை நூல்களையும்‌, வசன கவிதைகளையும்‌, சீட்டுக்‌ கவிகளையும்‌ எழுதியவர்‌.

8. கருத்தை அறிவிக்கும்‌ கருவியாகும்‌? மொழி

9. தமிழர்கள்‌ தமிழை ஆகக்‌ கருதி போற்றி வந்துள்ளனர்‌? உயிர்‌

10. அறிந்த தனைத்து அறிந்து வளர்‌ மொழி வாழியவே? வானம்‌

11. இசை என்பதற்கு பொருள்‌ ? புகழ்‌

12. “தமிழ்தேனீ” என்று பாரதியாரைப்‌ புகழ்ந்தவர்‌ ?
 பாரதிதாசன்‌

13. மக்கள்‌ வாழும்‌ நிலப்பகுதியைக்‌ குறிக்கும்‌ சொல்‌ ? வைப்பு

14. தமிழ்‌ எங்குப்‌ புகழ்‌ கொண்டு வாழ்கிறது?
 ஏழு கடல்களால்‌ சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும்‌ தன்‌ இலக்கிய மணத்தைப்‌ பரவச்‌ செய்து, புகழ்‌ கொண்டு வாழ்கிறது.

15. தமிழ்‌ எவற்றை அறிந்து வளர்கிறது? வானம்‌ வரை உள்ளடங்கியுள்ள எல்லாப்‌ பொருண்மைகளையும்‌ அறிந்து மேன்மேலும்‌ வளர்கிறது.


நூல்வெளி:


* கவிஞர்‌, எழுத்தாளர்‌, இதழாளர்‌, சமூகச்‌ சீர்திருத்தச்‌ சிந்தனையாளர்‌, விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ எனப்பன்முக ஆற்றல்‌ கொண்டவர்‌ சி. சுப்பிரமணிய பாரதியார்‌.
 
* இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப்‌ போருக்கு வித்திட்டவர்‌.

* கவிதைகள்‌ மட்டுமன்றி, சந்திரிகையின்‌ கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும்‌ வசனகவிதைகளையும்‌  சீட்டுக்கவிகளையும்‌ எழுதியவர்‌.

 * சிந்துக்குத்‌ தந்தை, செந்தமிழ்த்‌ தேனி, புதிய அறம்‌ பாட வந்த
அறிஞன்‌, மரம்‌ பாட வந்த மறவன்‌ என்றெல்லாம்‌ பாரதிதாசன்‌ இவரைப்‌ புகழ்ந்துள்ளார்‌.


"வாழ்க நிரந்தரம்‌ வாழ்க தமிழ்மொழி !
வாழிய வாழியவே!"
 இப்பாடல்‌ பாரதியார்‌ கவிதைகள்‌ என்னும்‌ தொகுப்பில்‌ தமிழ்மொழி வாழ்த்து என்னும்‌
தலைப்பில்‌ இடம்‌ பெற்றுள்ளது.

10th-  காற்றே வா! (பாரதியார்‌)


1. “உனக்குப்‌ பாட்டுகள்‌ பாடுகிறோம்‌ உனக்குப்‌ புகழ்ச்சிகள்‌ கூறுகிறோம்‌” 
-பாரதியார்‌

2. பாரதியார்‌ _________ அறியப்பட்டவர்‌?
 எட்டயபுர ஏந்தலாக

3. பாரதியார்‌ _______ எனப்‌ பாராட்டப்பட்டவர்‌? 
- பாட்டுக்கொரு புலவன்‌

4. ______ , _______முதலிய இதழ்களின்‌ ஆசிரியராகப்‌ பணியாற்றியவர்‌ பாரதியார்‌?
- இந்தியா, சுதேசமித்திரன்‌

5. இயற்கை வாழ்வு எவற்றோடு இயைந்தது?
- காடு, மலை, அருவி, கதிரவரன்‌ இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு.

6. இயற்கையை பற்றி கவிஞர்‌ பாடியள்ள பாடல்கள்‌ யாவை?
i. நீரின்றி அமையாது உலகு
ii. காற்றின்றி அமையாது உலகு

7. பாரதியார்‌ எவ்வாறெல்லாம்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌?
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்‌. 

* நீடுதுயில்‌ நீக்கப்‌ பாடிவந்த நிலா
* சிந்துக்குத்‌ தந்தை
* பாட்டுக்கொரு புலவன்‌:
* மகாகவி
* கலைமகள்‌ - என்றெல்லாம்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌ ஆவார்‌

8.  பாரதியாரின்‌ சிறப்புகள்‌ யாவை?
* கவிஞர்‌
* கட்டுரையாளர்‌
* சிறுகதையாளர்‌
* ஆசிரியர்‌
* இதழாசிரியர்‌
* கேலிச்சித்திரம்‌ - கருத்துப்படங்களை உருவாக்கியவர்‌

9. பாரதியார்‌ உலகிற்கு தந்த படைப்புகள்‌ எவை?

* கண்ணன்‌ பாட்டு
* குயில்‌ பாட்டு
*  பாப்பா பாட்டு
* பாஞ்சாலி சபதம்‌
* புதிய ஆத்திச்சூடி

10. பாரதியார்‌ ஆசியரியராகப்‌ பணியாற்றிய இதழ்களின்‌ பெயர்கள்‌ யாவை?
பாரதியார்‌ ஆசிரியராகப்‌ பணியாற்றிய இதழ்களின்‌ பெயர்கள்‌ இந்தியா, சுதேசிமித்திரன்‌ ஆகும்‌.

11. வசன கவிதை என்றால்‌ என்ன? உரைநடையும்‌ கவிதையும்‌ இணைந்து யாப்புக்‌ கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்‌. விதை வடிவம்‌ வசன கவிதை எனப்படும்‌.

12. புதுக்கவிதை உருவாக காரணம்‌ யாது? 
உணர்ச்சி பொங்கல்‌ கவிதை படைக்கும்‌ இடங்களில்‌ யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார்‌ இவ்வடிவத்தை இலகுவாகக்‌ கையாண்டு
உள்ளார்‌. இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம்‌ உருவாகக்‌ காரணமாயிற்று.

13. காற்றிடம்‌ எதனைக்‌ கொண்டுவந்து கொடுக்குமாறு பாரியார்‌ வேண்டுகிறார்‌?

மகரந்தத்தூளைச்‌ சுமந்து, மனதை மயக்கும்‌ வாசனையுடன்‌, இலைகள்‌ மற்றும்‌ நீரலைகள்‌ மீது உராய்ந்து மிகுந்த உயிர்‌ வளியைக்‌ கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம்‌ பாரதியார்‌ வேண்டுகிறார்‌.

14. எப்படி வீசுமாறு காற்றைப்‌ பாரதியார்‌ பணிக்கிறார்‌?
 காற்றை மெதுவாக, நல்ல முறையில்‌ சீராக, நீண்ட காலம்‌ நின்று வீசிக்‌ கொண்டிருக்குமாறு பாரதியார்‌ பணிக்கிறார்‌.

15 பாரதியார்‌ குறிப்பு வரைக. 

◆ மகாகவி சுப்பிரமணிய பாரதியார்‌ நீடுதுயில்‌ நீக்கப்‌ பாடிவந்த நிலா, சிந்துக்குத்‌
தந்தை, பாட்டுக்கொரு புலவன்‌ என்றெல்லாம்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌.
 
◆ கவிஞர்‌, கட்டுரையாளர்‌, சிறுகதையாளர்‌, ஆசிரியர்‌, இதழாசிரியர்‌ கேலிச்சித்திரம்‌ -
கருத்துப்படங்களை உருவாக்கியவர்‌.

◆ கண்ணன்‌ பாட்டு, குயில்‌ பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம்‌, புதிய ஆத்திச்சூடி
ஆகியன உலகிற்கு தந்த படைப்புகள்‌.

 ◆ இந்தியா, சுதேசிமித்திரன்‌ ஆகிய இதழ்களின்‌ ஆசிரியராகப்‌ பணியாற்றியுள்ளார்‌

நூல்‌ வெளி:

*  மகாகவி சுப்பிரமணிய பாரதியார்‌,
 'நீடுதுயில்‌ நீக்கப்‌ பாடி வந்த நிலா',
 'சிந்துக்குத்‌ தந்தை' என்றெல்லாம்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌;

* எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்‌;

* கவிஞர்‌; கட்டுரையாளர்‌; கேலிச்சித்திரம்‌- கருத்துப்படம்‌ போன்றவற்றை உருவாக்கியவர்‌;

* சிறுகதை ஆசிரியர்‌, இதழாளர்‌,  சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்‌,
பெண்ணடிமைத்தனத்தையும்‌ தன்‌ பாடல்களில்‌ எதிர்த்து எழுதியவர்‌.

* குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்‌ முதலிய காவியங்களையும்‌ கண்ணன்‌ பாட்டையும்‌ பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என,
குழந்தைகளுக்கான நீதிகளையும்‌ பாடல்களில்‌ தந்தவர்‌.

 * இந்தியா, சுதேசமித்திரன்‌ முதலிய இதழ்களின்‌ ஆசிரியராகப்‌ பணியாற்றியவர்‌. பாட்டுக்கொரு புலவன்‌ எனப்‌ பாராட்டப்பட்டவர்‌ பாரதியார்‌.

* இவருடைய கவிதைத்‌ தொகுப்பிலுள்ள காற்று என்னும்‌ தலைப்பிலான
வசனகவிதையின்‌ ஒரு பகுதியே பாடப்பகுதியாக ( 10th-  காற்றே வா!) இடம்பெற்றுள்ளது


தெரிந்து தெளிவோம்‌:


உரைநடையும்‌ கவிதையும்‌ இணைந்து யாப்புக்‌ கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்‌ கவிதை வடிவம்‌ வசனகவிதை எனப்படுகிறது.

ஆங்கிலத்தில்‌ Prose poetry ( Free verse) என்றழைக்கப்படும்‌ இவ்வடிவம்‌ தமிழில்‌ பாரதியாரால்‌ அறிமுகப்படுத்தப்பட்டது.

 உணர்ச்சி பொங்கக்‌ கவிதை படைக்கும்‌ இடங்களில்‌ யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார்‌ இவ்வடிவத்தை இலகுவாகக்‌ கையாண்டுள்ளார்‌. இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம்‌ உருவாகக்‌ காரணமாயிற்று.

11th-  இதழாளர்‌ பாரதி (பாரதியார்‌)


 
1. பாரதியார்‌ ஆசிரியராக பொறுப்பேற்ற பெண்களுக்கான இதழ்‌? சக்கரவர்த்தினி

2. பத்திரிக்கை துறையில்‌ பாரதிக்கு குருவாக திகழ்ந்தவர்‌? ஜி. சுப்பிரமணியம்‌

3. பாரதியார்‌ கேலிச்சித்திரத்தை __ என்று குறிப்பர்‌?
விகட சித்திரம்‌

4. பாரதியார்‌ கருத்துப்பபடங்களை வெளியிட்ட இதழ்‌?
 விஜயா

5. பெண்களுக்காக “குறள்‌ வெண்பா” எழுதி வெளியிட்ட பாரதியின்‌ இதழ்‌?
 சக்கரவர்த்தினி

6. பாரதி “இந்தியா” என்ற இதழை வண்ணத்தாளில்‌ வெளியிட்டார்‌? சிவப்பு

7."இந்தியா" இதழின்‌ சிவப்புநிறம்‌ ___ குறிக்கிறது? புரட்சி

8. பாரதி தன்‌ மனைவி செல்லம்மாவை புனைப்பெயரில்‌ குறிப்பிட்டிருந்தார்‌? வள்ளி
 
9. மகுடமிடல்‌ என்று பாரதி. _______ குறிப்பிட்டார்‌? தலைப்பிடலை

10. பாரதி காலக்கட்டத்தில்‌ வாழ்ந்த அமீர்‌ அமானுல்லாகான்‌ _______ நாட்டிற்கு மன்னர்‌ ஆவார்‌? ஆப்கானிஸ்தான்‌

11.“உத்தமர்‌ தேசாபிமானி” என்று புனைப்‌ பெயர்‌ சூட்டிக்‌ கொண்டவர்‌? பாரதி

12. பாரதியார்‌ தமிழாசிரியராகப்‌ பணியாற்றிய சேதுபதி உயிர்நிலைப்பள்ளியில்‌ உள்ளது? மதுரை

13. பாரதியார்‌ உதவி ஆசியராக இருந்த இதழ்‌? விஜயா

14. பாரதி முதன்‌ முதலாக பணியாற்றி இதழ்‌ எது? பாரதி முதன்‌ முதலாக பணியாற்றி இதழ்‌ சுதேசமித்திரன்‌ ஆகும்‌.

15. பாரதியார்‌ ஆசியராகவும்‌ துணையாசிரியராகவும்‌ பணியாற்றி இதழ்கள்‌ எவை?
சுதேசமித்திரன்‌, சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, விஜயா, சூர்யோதயம்‌, தருமபோதினி, கரம்யோகி

16. பாரதியார்‌ தம்‌ படைப்புகளை வெயிட்ட இதழ்கள்‌ யாவை? விவேகபாநு, காமன்‌ வில்‌, தேசபக்தன்‌, சர்வஜன மித்திரன்‌, கலைமகள்‌, கதாரத்னாகரம்‌

17. கேலிச்சித்திரம்‌ என்பதற்கு வழங்கப்படும்‌ வேறுபெயர்கள்‌ யாவை? பகடி வரைபடம்‌, கூடார்த்தபடம்‌, வசைக்கேலிச்சித்திரம்‌, வேடிக்கை ஓவியம்‌, அங்கத ஓவியம்‌, ஏளன ஓவியம்‌, அரசியல்‌ வசைக்‌ கேலிச்சித்திரம்‌

18. பெண்களுக்காக சக்ரவரத்தினி இதழில்‌ எழுதிய குறள்‌ வெண்பாவினை எழுது? பெண்மை அறிவுயரப்‌ பீடோங்கும்‌ பெண்மைதான்‌ ஒண்மை யுறஓங்கும்‌ உலகு

19. எதை பாரதி ஒழித்தார்‌? தன்‌ பெயரையும்‌, தன்னையும்‌ முன்னிலைபடுத்திக்‌ கொள்ள விரும்பும்‌ மனிதர்களுக்கு இடையில்‌ “தான்‌” என்ற ஒன்றை ஒழித்தவர்‌ பாரதி

20. மகாகவி பாரதியிடம்‌ துணையாசிரியர்களாகப்‌ பணியாற்றியவர்களைக்‌ கூறுக? பி.பி. சுப்பையா, என்‌. நாகசாமி, பரலி சு. நெல்லையப்பர்‌, ஹரிஹர சர்மா, வ. ராமசாமி, கனலிங்கம்‌

21. விடுதலை வேட்கையூட்டும்‌ கருத்துக்கள்‌ மக்களைச்‌ சென்றடைந்தால்‌ போதும்‌ என்று எண்ணி எழுதிய புனைப்பெயர்கள்‌ யாவை? இளசை சுப்பிரமணியன்‌, சாவித்திரி, சி.சு.பாரதி, பிஞ்சுக்காளிதாசன்‌, வேதாந்தி, நிந்திய தீரர்‌, ஷெல்லிதாசன்‌, காளிதாசன்‌, சக்திதாசன்‌, ரிஷிகுமாரன்‌, காசி, சரஸ்வதி, செல்லம்மா, கிருஷ்ணன்‌, உத்தமத்‌ தேசாபிமானி

12th (பாரதியார்‌)


1. "நம்மிலும்‌ மெலியாருக்கு நாம்‌ இரங்கி அவர்களை நமக்கு நிகராகச்‌ செய்துவிட வேண்டுமென்று பாடுபடுவதே நாம்‌ வலிமை பெறுவதற்கு வழியாகும்‌, வேறு வழியில்லை" என கூறியவர்‌?
பாரதியார்‌

2. . "தமிழ்‌ தமிழ்‌ தமிழ்‌ என்று எப்போதும்‌ தமிழை வளர்ப்பதே கடமையாகக்‌ கொள்க" எனக்‌ கூறியவர்‌? பாரதியார்‌

3. "புதிய புதிய செய்தி புதிய புதிய யோசனை புதிய புதிய உண்மை புதிய புதிய இன்பம்‌ தமிழில்‌ ஏறிக்கொண்டே போகவேண்டும்‌" என கூறியவர்‌? பாரதியார்‌

4. "நிற்கும்‌ நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள்‌ கட்டி வைத்துக்‌ கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும்‌ பழங்காலத்து மூடர்களை கண்டு குடல்‌ குலுங்க சிரி" எனக்‌ கூறியவர்‌? பாரதியார்‌

5. "தமிழ்நாட்டில்‌ வீதி தோறும்‌ தமிழ்ப்‌ பள்ளிக்கூடங்கள்‌ மலிக என்றெழுது" எனக்‌ கூறியவர்‌?
பாரதியார்‌

6. "ஆணும்‌ பெண்ணும்‌ ஓர்‌ உயிரின்‌ இரண்டு தலைகள்‌ என்றெழுது" எனக்‌ கூறியவர்‌? பாரதியார்‌

நூல் வெளி:


மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம்‌ ரா. அ. பத்மநாபன்‌ பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்‌' என்னும்‌ நூலில்‌ இடம்பெற்றிருக்கிறது.

பாரதி, பதினைந்து வயதில்‌ கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம்‌ அரசருக்கு எழுதிய கவிதைக்‌ கடிதம்முதல்‌ அவர்தம்‌ மறைவிற்கு
முன்னர்‌ குத்திகேசவருக்கு எழுதிய கடிதம்வரை அனைத்தும்‌ நம்மிடம்‌ பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின்‌ சிறப்பு.

 பாரதியாரைவிட ஏழாண்டுகள்‌ இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப்‌ பாரதி தன்னுடைய அருமைத்‌ தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்‌. பாரதியின்‌ கடிதங்கள்‌ மேலும்‌ அவரை நன்றாகப்‌ புரிந்துகொள்ளத்‌ துணைபுரிகின்றன.

பழைய புத்தகம்:

11th  நான்‌ விரும்பும்‌ கவிஞர்‌ பாரதியார்‌


அவர்‌ கவிதைகள்‌ மூலம்‌ தேசியத்தை வளர்த்துத்‌ தமிழ்‌ மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார்‌.

பிறப்பும்‌ இளமையும்‌:


சின்னசாமி இலக்குமி அம்மையார்‌ ஆகியோர்க்கு 11.12.1882இல்‌ பாரதியார்‌ பிறந்தார்‌.

 பிறந்த ஊர்‌ தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம்‌.

 அவர்‌ இளமையிலேயே ஆங்கிலக்‌ கல்வியை அறவே வெறுத்தார்‌.

பைந்தமிழ்ப்‌ பாவலராய்த்‌ திகழ்ந்து பாரதி என்னும்‌ பட்டம்‌ பெற்றார்‌.

அவர்‌, சில காலம்‌ எட்டையபுரம்‌ அரசவைக்‌ கவிஞராக விளங்கினார்‌.

பின்னர்‌, மதுரைச்‌ சேதுபதி உயர்நிலைப்‌
பள்ளியில்‌ தமிழாசிரியராகப்‌ பணிபுரிந்தார்‌ சென்னையில்‌ இதழாசிரியராகவும்‌ பணிபுரிந்தார்‌.

விடுதலை வேட்கை:


பாரதியார்‌ வாழ்ந்த காலம்‌, பாரத நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த காலம்‌.

 நாடு விரைவில்‌ விடுதலை அடையவேண்டுமென்ற துடிப்புடன்‌ இருந்தார்‌.

 தம்‌ பாட்டுத்திறத்தால்‌, தூங்கிக்‌
கிடந்த தமிழ்‌ மக்களைத்‌ தட்டி எழுப்பி விடுதலைக்‌ கனலை மூட்டினார்‌.

 சாதிசமயப்‌ பாகுபாடின்றி
அனைவரையும்‌ விடுதலை வேள்வியில்‌ ஈடுபடச்‌ செய்தார்‌.

“ஆயிரம்‌ உண்டிங்கு சாதி எனில்‌
        அன்னியர்‌ வந்து புகலென்ன நீதி” என வீர முழக்கமிட்டார்‌.

“பாருக்குள்ளே நல்ல நாடு”
“நாமிருக்கும்‌ நாடு நமது என்பதறிந்தோம்‌” - என்றெல்லாம்‌ பாடி, மக்களுக்கு
நாட்டுப்பற்றையும்‌ விடுதலை உணர்வையும்‌ ஊட்டினார்‌.

தேசியக்‌ கவிஞர்‌ பாரதியார்‌


இந்தியத்‌ திருநாட்டின்‌ இணையற்ற கவிஞராகப்‌ பாரதியார்‌ விளங்கினார்‌.

 இதனால்‌ அவர்‌, அனைவராலும்‌ “தேசியக்‌ கவிஞர்‌” எனப்‌ பாராட்டப்‌ பெற்றார்‌.

 “எல்லாரும்‌ ஓர்‌ குலம்‌, எல்லாரும்‌ ஓர்‌ நிறை, எல்லாரும்‌ இந்நாட்டு மன்னர்‌” எனத்‌ தேசிய ஒருமைப்பாட்டுணர்வை ஊட்டினார்‌.

“முப்பது கோடி முகமுடை யாள்‌உயிர்‌
       மொய்ம்புற ஒன்றுடையாள்‌ இவள்‌
 செப்பு மொழிபதி னெட்டுடையாள்‌ எனிற்‌
         சிந்தனை ஒன்றுடையாள்‌.”

என்னும்‌ பாடலின்மூலமாக, “முப்பதுகோடி மக்களும்‌ இந்தியரே, அவர்கள்‌ பேசும்‌ மொழி பலவாய்‌ இருப்பினும்‌ சிந்தனை ஒன்றே!” என்ற உயரிய தேசிய உணர்வை ஊட்டியவர்‌ பாரதி.

முன்னறி புலவர்‌ பாரதி:


விடுதலை அடைதற்கு முன்பாகவே, எதிர்காலத்தில்‌ நிகழவிருக்கும்‌ நிகழ்வுகளைத்‌ தாம்‌ வாழும்‌ காலத்திலேயே பாடி மகிழ்ந்த முன்னறி புலவர்‌ பாரதியாவார்‌.

“ஆடுவோமே பள்ளுப்‌ பாடுவோமே,
    ஆனந்த சுதந்தரம்‌ அடைந்துவிட்‌ டோமென்று” எனவும்‌,

“வங்கத்தில்‌ ஓடிவரும்‌ நீரின்‌ மிகையால்‌
      மையத்து நாடுகளில்‌ பயிர்‌ செய்குவோம்‌” எனவும்‌,

“காசி நகர்ப்புலவர்‌ பேசும்‌ உரைதான்‌
      காஞ்சியில்‌ கேட்பதற்கோர்‌ கருவி செய்வோம்‌” எனவும்‌, பாடினார்‌ பாரதியார்‌.


சமுதாயத்‌ தொண்டு:

சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர்‌ பாரதி. 
அதனால்தான்‌, "குலத்‌ தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்‌ பாவம்‌” எனக்‌ குழந்தை மனத்தில்‌ ஆழப்பதித்தார்‌ பாரதி.

“மாதர்‌ தம்மை இழிவு செய்யும்‌ மடமையைக்‌ கொளுத்துவோம்‌” என்பதன்மூலம்‌ பெண்கள்‌
நலன்‌ பேண விரும்பியவர்‌ பாரதி.

“தனியொருவனுக்‌ குணவிலை யெனில்‌
        சகத்தினை அழித்திடுவோம்‌”

“வாழிய செந்தமிழ்‌; வாழ்கநற்‌ றமிழர்‌”

“செந்தமிழ்‌ நாடெனும்‌ போதினிலே இன்பத்‌
தேன்வந்து பாயுது காதினிலே”

என்று பாடிய பாடல்களே, பாரதியாரின்‌ சமுதாயத்‌ தொண்டுள்ளத்திற்கும்‌, மொழிப்பற்றுக்கும்‌ தக்க
சான்றுகளாம்‌.


“பாரதநாடு பார்க்கெலாம்‌ திலகம்‌” எனப்‌ பாடிய பைந்தமிழ்ப்‌ பாவலன்‌ 11.09.1921 அன்று மண்ணுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்‌.

 அவர்‌ வழி நாமும்‌ நடந்து, நாடும்‌ வீடும்‌ போற்ற வாழ முயல்வோமாக!

குயில்பாட்டு:


பாட்டினைப்போல்‌ ஆச்சரியம்‌ பாரின்‌ மிசை இல்லையடா! என்று வியந்தவர்‌ கவிஞர்‌ சுப்பிரமணிய பாரதியார்‌ ஆவார்‌.

 தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில்‌ சின்னசாமி ஐயருக்கும்‌ இலக்குமி அம்மையாருக்கும்‌ மகனாகப்‌ பிறந்தவர்‌.

அடிமைப்பட்டுக்‌ கிடந்த இந்தியாவில்‌ வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத்‌ தம்‌ கவிதைகளால்‌ உரம்‌ ஊட்டியவர்‌. தேசியகவி
என்றும்‌ மகாகவி என்றும்‌ போற்றப்பட்டவர்‌. 

இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக்‌ கட்டுரைகளாலும்‌ கருத்துப்‌ படங்களாலும்‌ ஆங்கிலேய ஆட்சியாளர்களைத்‌ திணறச்‌ செய்தவர்‌.

சுதேசமித்திரன்‌ இதழாசிரியராகச்‌ சில நாள்‌ விளங்கியவர்‌.

பாரதியார்‌ கவிதைகள்‌, பாஞ்சாலி சபதம்‌, கண்ணன்‌ பாட்டு, குயில்பாட்டு முதலிய கவிதைகள்‌ மட்டுமின்றி ஞானரதம்‌, சந்திரிகையின்‌ கதை, தராசுமுதலியஉரைநடை நூல்களையும்‌ எழுதியவர்‌.

 இவருடைய வசன கவிதைகள்‌ வால்ட்விட்மன்‌ கலீல்‌ கிப்ரான்‌ முதலிய கவிஞர்களின்‌ கவிதைகளோடு ஒப்பிடத்‌ தக்கவை.

தமிழிலக்கிய வரலாற்றில்‌ ஒரு புதிய பகுதி பாரதியோடு தொடங்குகிறது எனலாம்‌.


முன்னைப்‌ பழம்‌ பொருளாய்ப்‌ பின்னைப்‌ புதுமை வாய்ந்ததாய தமிழ்‌ மொழியைத்‌ திறன்மிக்கதாய்‌ ஆக்கும்‌ அறிஞர்‌ பெருமக்களுள்‌ பாரதிக்கு ஒர்‌ தனி இடம்‌ உண்டு.

பாரதியாரின்‌ பாங்சாலிசபதம்‌, கண்ணன்‌ பாட்டு, குயில்‌ பாட்டு என்னும்‌ முப்பெரும்‌ பாடல்களுள்‌ ஒன்றான குயில்பாட்டின்‌ ஒரு சிறு பகுதி நமது பாடப்பகுதியாக இடம்‌ பெறுகிறது.

கானப்‌ பறவை கலகலெனு மோசையிலும்‌

காற்று மரங்களிடைக்‌ காட்டு மிசையினிலும்‌

ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்‌

நீலப்‌ பெருங்கடலெந்‌ நேரமுமே தானிசைக்கும்‌

ஒலத்‌ திடையே யுதிக்கும்‌ இசையினிலும்‌

மானுடப்‌ பெண்கள்‌ வளருமொரு காதலினால்‌

ஊனுருகப்‌ பாடுவதில்‌ ஊறிடுந்தேன்‌ வாரியிலும்‌

ஏற்றநீர்ப்‌ பாட்டி னிசையினிலும்‌ நெல்லிடிக்கும்‌

கோற்றொடியார்‌ குக்குவெனக்‌ கொஞ்சும்‌ இசையினிலும்‌

சுண்ண மிடிப்பார்தம்‌ சுவைமிகுந்த பண்களிலும்‌

பண்ணை மடவார்‌ பழகுபல பாட்டினிலும்‌

வட்டமிட்டுப்‌ பெண்கள்‌ வளைக்கரங்கள்‌ தாமொலிக்கக்‌

கொட்டி யிசைத்திடுமோர்‌ கூட்டமுதப்‌ பாட்டினிலும்‌

வேயின்‌ குழலோடு வீணை முதலாமனிதர்‌

வாயினிலும்‌ கையினிலும்‌ வாசிக்கும்‌ பல்கருவி

நாட்டினிலும்‌ காட்டினிலும்‌ நாளெல்லாம்‌ நன்றொலிக்கும்‌

பாட்டினிலும்‌ நெஞ்சைப்‌ பறிகொடுத்தேன்‌ பாவியேன்‌...

- பாரதியார்‌

உலகம்‌ இசையால்‌ நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில்‌ இசைக்கப்படும்‌ செவ்வியல்‌ இசைமட்டுமன்று, ஏட்டில்‌ எழுதப்படாமலும்‌ கருவிகளால்‌ இசைக்கப்படாமலும்‌ காற்று முழுதும்‌ கலந்திருப்பதும்‌ இசைதான்‌. வாய்மொழி இலக்கியமாய்‌ மக்கள்‌ இலக்கியமாய்ப்‌ பரவிக்‌ கிடக்கும்‌ இசைத்தமிழ்‌ தொட்ட இடமெல்லாம்‌ தட்டுப்படுவது உண்டு. அந்த இசையின்‌ உருவகமாக நாம்‌ கொள்ளுவது குயில்‌. குயில்பாட்டு என்ற பாரதியின்‌ படைப்பில்‌ இசையின்‌ பெருமை பேசப்படுகிறது. பாரதியின்‌ குயிலி இசைமயக்கிலே கட்டுண்டு கிடந்த பகுதி நமது பாடப்‌ பகுதியாகத்‌ தரப்பட்டுள்ளது.

அருஞ்சொற்பொருள்‌:


வாரி - கடல்‌;
 கோற்றொடியார்‌ - பெண்கள்‌ (உலக்கையைத்‌ தொடியணிந்த கையில்‌
கொண்ட பெண்கள்‌);
 குக்குவென - (நெல்லிடிக்கும்‌ பெண்கள்‌ செய்யும்‌) ஒலிக்குறிப்பு, 
பண்ணை- வயல்வெளி;
 வேயின்குழல்‌ - புல்லாங்குழல்‌; பண்கள்‌ - இசைப்பாட்டுகள்‌.

இலக்கணம்‌:


கானப்பறவை - ஏழாம்‌ உருபும்‌ பயனும்‌ உடன்‌ தொக்க தொகை;
 வளைக்கரங்கள்‌ - இரண்டாம்‌ வேற்றுமை உருபும்‌ பயனும்‌ உடன்‌ தொக்க தொகை;

 கலகலென, குக்குவென -
இரட்டைக்கிளவி ;
 நீரோசை - ஆறன்‌ தொகை;
 பெருங்கடல்‌ - பண்புத்‌ தொகை; பாவியேன்‌ -
தன்மை ஒருமை வினைமுற்று;
 பழகு, பாட்டு - வினைத்‌ தொகை;
 வாசிக்கும்‌ கருவி - செய்யுமென்‌
வாய்பாட்டுப்‌ பெயரெச்சம்‌.


6. மறுமலர்ச்சிப்‌ பாடல்கள்‌


பழமையை ஆராய்ச்சி இன்றி ஏற்றுக்‌ கொள்வதும்‌ புதுமையை ஏற்றுக்‌ கொள்ளத்‌ தயங்குவதும்‌ நம்மிடையே படிந்து கிடக்கும்‌ பண்பாகும்‌. மரபின்‌ மிகையான அழுத்தத்திலிருந்து நம்மால்‌ எளிதில்‌ விடுபடமுடியாமையே இதற்கான காரணமாகும்‌. மரபின்‌ பெயரால்‌ காலத்திற்கு
ஒவ்வாத மதிப்பீடுகளையும்‌ நாம்தொடர்ந்து போற்றிக்‌ கொண்டே வந்திருக்கிறோம்‌. இத்தகைய போக்குகளை நம்‌ இலக்கியங்களிலும்‌ காண்கிறோம்‌. ஆனால்‌ காலத்திற்கேற்ப இலக்கியத்தின்‌
மீதான பார்வையும்‌ போக்கும்‌ மாறிக்‌ கொண்டே வந்திருக்கின்றன. அங்ஙனம்‌ மாறி வருவதை நம்மால்‌ புறந்தள்ள இயலாது.

““பழமை பழமை யென்று
      பாவனை பேச லன்றிப்‌
பழமையிருந்த நிலை - கிளியே
      பாமரர்‌ ஏதறிவார்‌."”
என்று பாடிய பாரதியிலிருந்து இலக்கிய மறுமலர்ச்சி தொடங்குகிறது எனலாம்‌.

மறுமலர்ச்சிப்‌ பாவலர்கள்‌ கண்மூடித்தனமாக மரபைத்‌ தாண்டிச்‌ செல்லுபவர்களுமல்லர்‌.

அப்படியே பழமையில்‌ அழுந்துபவர்களும்‌ அல்லர்‌. அவர்கள்‌ பார்வை புதிது; பாடு பொருளும்‌ புதிது; நடை புதிது; இலக்கிய நாட்டமும்‌ உத்திகளும்‌ புதியன. அவர்தம்‌ இலக்கியங்களில்‌ செவ்வியல்‌ மரபுகள்‌ மீறப்படுவதும்‌ சமூக அவலங்களைத்‌ தோலுரிப்பதும்‌ நிகழும்‌. மானுடம்பாடும்‌ நெறியே மறுமலர்ச்சிப்‌ பாடல்களின்‌ உயிர்‌ நாடி எனலாம்‌.

அ) மாலைக்கால வருணனை


இப்பாடல்‌ பாரதியாரின்‌ பாஞ்சாலி சபதத்தில்‌ உள்ளது. மாயச்‌ சூதினுக்கு மனம்‌ இணங்கிய பாண்டவர்கள்‌, அத்தினாபுரிக்குப்‌ பயணம்‌ புறப்படுகிறார்கள்‌. பபணத்தினிடையே மாலைக்காலத்தில்‌ ஒரிடத்தில்‌ தங்குகிறார்கள்‌. அப்பொழுது அந்திவானத்தின்‌ அழகுக்‌ காட்சிகளை எல்லாம்‌ அர்ச்சுனன்‌ பாஞ்சாலியிடம்‌ கூறுகிறான்‌. அர்ச்சுனன்‌ கூறும்‌ அந்திவான வருணையின்‌ ஒரு பகுதியே நமக்குப்‌ பாடமாக வந்துள்ளது.


பார்‌; சுடர்ப்‌ பரிதியைச்‌ சூழவே படர்முகில்‌;

எத்தனை தீப்பட்‌ டெரிவன ? ஓகோ!

என்னடி ! இந்தவன்னத்‌ தியல்புகள்‌

எத்தனை வடிவம்‌! செழும்பொன்‌ காய்ச்சி

விட்ட ஓடைகள்‌ ! வெம்மை தோன்றாமே

எரிந்திடுந்‌ தங்கத்‌ தீவுகள்‌ ! பாரடி !

நீலப்‌ பொய்கைகள்‌ அடடா நீல

வன்ன மொன்றில்‌ எத்தனை வகையடி !

எத்தனை செம்மை ! பசுமையுங்‌ கருமையும்‌

எத்தனை ! கரிய பெரும்பெரும்‌ பூதம்‌ !

நீலப்‌ பொய்கையின்‌ மிதந்திடுந்‌ தங்கத்‌

தோணிகள்‌ ! சுடரொளிப்‌ பொற்கரை யிட்ட

கருஞ்சிக ரங்கள்‌ ! காணடி, ஆங்கு

தங்கத்‌ திமிங்கலம்‌ தாம்பல மிதக்கும்‌

இருட்கடல்‌! ஆஹா ! எங்கு நோக்கிடினும்‌

ஒளித்திரள்‌ ! ஒளித்திரள்‌ ! வன்னக்‌ களஞ்சியம்‌!

- சி. சுப்பிரமணிய பாரதியார்‌


(வானத்தைக்‌ கடலாகவும்‌ மேகக்‌ கூட்டங்களை நீரோடையாகவும்‌, தங்கத்‌ தீவுகளாகவும்‌, பொய்கையாகவும்‌, தோணியாகவும்‌, திமிங்கலங்களாகவும்‌ உருவகித்துக்‌ கூறும்‌ அழகினை அறிந்து மகிழ்க)


நூற்குறிப்பு:


வடமொழியில்‌, வியாசர்‌ இயற்றிய மகாபாரதக்‌ கதையில்‌ வரும்‌ பாஞ்சாலி, துரியோதனன்‌ சபையில்‌ செய்த சூளுரையை மையமாகக்‌ கொண்டு, பாரதியார்‌ இக்குறுங்காவியத்தைப்‌ படைத்துள்ளார்‌.

 “பாஞ்சாலி நம்‌ பாரதத்தாய்‌; துரியோதனக்‌ கூட்டம்‌ நம்‌ நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்‌; பாண்டவர்கள்‌ - அன்றைய பாரத மக்கள்‌ என்று, படிப்பவர்‌ எண்ணுமாறு பாஞ்சாலிசபதம்‌ பாடப்பெற்றுள்ளது.

பாரதியாரின்‌ பாஞ்சாலிசபதம்‌, அழைப்புச்‌ சருக்கம்‌, சூதாட்டச்‌ சருக்கம்‌, அடிமைச்‌ சருக்கம்‌, துகிலுரிதற்சருக்கம்‌, சபதச்‌ சருக்கம்‌ ஆகிய ஐந்து சருக்கங்களைக்‌ கொண்டுள்ளது.

பாடப்பகுதி, அழைப்புச்‌ சருக்கத்தில்‌ உள்ளது. ''எளியபதங்கள்‌, எளியநடை, எளிதில்‌ அறிந்து கொள்ளக்‌ கூடிய சந்தம்‌, பொது ஜனங்கள்‌ விரும்பும்‌ மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன்‌, நமது தாய்மொழிக்குப்‌ புத்துயிர்‌ தருவோனாகின்றான்‌. ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள்‌ எல்லோருக்கும்‌ நன்குபொருள்‌ விளங்கும்படி எழுதுவதுடன்‌ காவியத்துக்குள்ள நயங்கள்‌ குறைபடாமலும்‌ நடத்துதல்‌ வேண்டும்‌.

காரியம்‌ மிகப்பெரிது, எனது திறமை சிறிது. ஆசையால்‌ இதனை எழுதி வெளியிடுகின்றேன்‌. பிறருக்கு ஆதர்சமாக அன்று; வழிகாட்டியாக !”” என்று பாரதியார்‌ பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள முகவுரை சிந்தனைக்குரிய சிறந்த பகுதியாகும்‌.

ஆசிரியர்‌ குறிப்பு:
இப்பாடலைப்‌ பாடியவர்‌

"நமக்குத்‌ தொழில்‌ கவிதை நாட்டிற்குழைத்தல்‌

இமைப்பொழுதுஞ்‌ சோரா திருத்தல்‌”

என்னும்‌ கொள்கை முழக்கமிட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியார்‌ ஆவார்‌. இவர்‌ 1882 ஆம்‌ ஆண்டு, டிசம்பர்த்‌ திங்கள்‌ 11ஆம்‌ நாள்‌ தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில்‌ பிறந்தார்‌.

இவர்‌ பெற்றோர்‌ சின்னச்சாமி ஐயர்‌; இலக்குமி அம்மாள்‌. இளமைப்‌ பெயர்‌ சுப்பிரமணியன்‌, இளமையிலேயே பாப்புனையும்‌ ஆற்றல்‌ பெற்றிருந்தமையால்‌, கலைமகள்‌ என்னும்‌ பொருள்‌ தரும்‌ “பாரதி” என்னும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றார்‌.

“தமிழ்‌ நாட்டில்‌ தமிழ்ப்புலவர்‌ ஒருவன்‌ இல்லையெனும்‌ வசை நீங்க” வந்து தோன்றியவர்‌ பாரதியார்‌. அவர்‌, பாட்டுத்‌ திறத்தாலே இந்த வையகத்தைப்‌ பாலித்திடச்‌ செய்தவர்‌.

பண்டிதர்களின்‌ கரடுமுரடான நடையில்‌ தேங்கிக்‌ கிடந்த தமிழைப்‌ பலரும்‌ படித்தறியும்‌ வகையில்‌, எளிய, இனிய பாக்களாக வடித்து உலவவிட்டவர்‌ பாரதியார்‌.

இவர்‌ தெருவெல்லாம்‌ தமிழ்‌ முழக்கம்‌ செழிக்கச்‌ செய்வீர்‌” எனவும்‌ தேமதுரத்‌
தமிழோசை உலகமெல்லாம்‌ பரவும்‌ வகை செய்தல்‌ வேண்டும்‌” எனவும்‌ தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப்‌ பாவலர்‌ ஆவார்‌.

ஆன்மீக விடுதலை, பெண்விடுதலை, சமுதாய விடுதலை, முதலான விடுதலைகளை உள்ளடக்கிய நாட்டுவிடுதலையை விழைந்த விடுதலைக்‌ கவிஞர்‌ ஆவார்‌.

இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இவர்‌. கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம்‌, குயில்பாட்டு என்னும்‌ முப்பெரும்‌ பாடல்களையும்‌, நாட்டுப்பற்றும்‌, மொழிப்பற்றும்‌ சமுதாயச்‌ சீர்த்திருத்த உணர்வும்‌ ஊட்டுகின்ற நூற்றுக்கணக்கான பாடல்களையும்‌ பாடியதோடு அமையாது ஞானரதம்‌, தராசு முதலான உரைநடை இலக்கியங்களையும்‌ படைத்துத்‌ தமிழன்னைக்கு வளஞ்சேர்ந்தவர்‌ ஆவார்‌.

தமிழ்‌, ஆங்கிலம்‌, சமக்கிருதம்‌, இந்தி, வங்காளம்‌, பிரெஞ்சு, அரபு முதலான
பலமொழிகளில்‌ புலமை பெற்றிருந்த இந்த மாக்கவி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்‌ இனிதாவ தெங்குங்‌ காணோம்‌?” எனப்‌ பாடித்‌ தமிழ்மொழியின்‌ பெருமையை உலகறியச்‌ செய்தவர்‌. “சொல்லில்‌ உயர்வு தமிழ்ச்‌ சொல்லே - அதைத்தொழுது படித்திடடி பாப்பா” எனப்‌ பாப்பாவுக்கு கூறுவதுபோல்‌ பலருக்கும்‌ கூறித்‌ தமிழ்ப்பற்றை வளர்த்த மாபெருங்‌ கவிஞராவார்‌.

அருஞ்சொற்பொருள்‌


பரிதி - சூரியன்‌;
 வன்னம்‌ - அழகு; 
முகில்‌ - மேகம்‌; 
பொய்கை - (மானுடரால்‌
ஆக்கப்படாது நீர்நிலை; (இங்கு மேகம்‌)
 இருட்கடல்‌ - நீலக்கடல்‌ (இங்கு வானம்‌) களஞ்சியம்‌
தொகுப்பு.

இலக்கணம்‌

படர்முகில்‌ - வினைத்தொகை;

செழும்பொன்‌, பெரும்பூதம்‌, கருஞ்சிகரம்‌ -
பண்புத்தொகைகள்‌, 

தங்கத்தீவு, தங்கத்தோணி, பொற்கரை, தங்கத்‌ திமிங்கலம்‌ உருவகங்கள்‌;

சுடரொளி - வினைத்தொகை.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url