Search This Blog

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் - Transfer of Learning

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் - Transfer of Learning

 

* முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.

* முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொளவதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.

* ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.

 

 கற்றல் மாற்றத்தின் வகைகள் - Types of Transfer of Learning

கற்றல் மாற்றம் 3 வகைப்படும்.

1. நேரடிக் கற்றல் மாற்றம் (Positive Transfer)

* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு புதிய பாடத்தினை கற்க உதவுவது நேரடிக் கற்றல் மாற்றம் எனப்படும். (எ.கா. டென்னிஸ் விளையாடக் கற்றவனுக்கு கைப்பந்தாட்டம் விளையாட கற்பது எளிதாக அமைவது.)

2. எதிர்மறைக் கற்றல் மாற்றம் - Negative Transfer

* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு பாடம் (அ) செயலை கற்க தடையாக அமைவது. (எ.கா. பிறமொழிகளைக் கற்பதில் தாய்மொழியின் பாதிப்பு.)

3. பூச்சிய, சூன்ய கற்றல் மாற்றம் - Zero Transfer

* முன்பு கற்ற ஒரு பாடம் (அ) செயல் வேறொரு பாடம் (அ) செயலை கற்கும்போது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. (எ.கா. கணித அறிவும் இசையில் உள்ள புலமையும்.)

 

பின்பற்றல் வழிக் கற்றல் - Learning by Imitation

* பாண்டுரா எனும் உளவியல் அறிஞர் வெளியிட்டார்.

* பிறரது நடத்தையைப் பார்த்து அதே போன்று தங்களுது நடத்தையினை மேற்கொள்ளுதல். (எ.கா. குழந்தைகளின் மொழிவளர்ச்சி)

* வேறொருவரின் கற்பனைப் படைப்பை நாமும் உணர்ந்து அனுபவித்து பின்பற்றும் ஆக்கக் கற்பனை எனப்படும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url