நினைவு – Remembering - நினைவு வீச்சு - Memory Span
நினைவு – Remembering
* நாம் கற்ற விசயங்களை மனதில் தங்க வைத்து தேவைப்படும் போது
பயன்படுத்த உதவுவது.
* நமது சிந்தனை மற்றும் காரண காரியங்களை ஆராய்வது நினைவைப் பொறுத்தே
அமையும்.
* சிறப்பான கற்றல் அமைய நல்ல நினைவு அவசியம்.
நினைவு கூர்தலின் படிநிலைகள்
* உட்வொர்த் என்பவர் 4 படிநிலைகளைக்
குறிப்பிடுகின்றார்.
1. பகுதிக் குறியீடுகளை வைத்து நினைவு கூர்தல்
2.மீண்டும் கொணர்தல்
3.அறிந்து கொள்ளுதல்
4.திரும்பக் கற்றல்
நினைவின் வகைகள்
1. புலனறிவு நினைவு
2. குறுகிய கால நினைவு - தற்காலிக நினைவு
3. நீண்ட கால நினைவு - நிலையான நினைவு
4. குறுகிய கால நினைவில் 2 உறுப்புகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும்.
சிறந்த நினைவின் இயல்புகள்
* விரைவு
* துல்லியம்
* கால அளவு
* எளிதாக வெளிக் கொணர்தல்
* பொருத்தமான, பயன்படுத்தக் கூடிய தன்மை
நினைவு வீச்சு - Memory Span
* ஒரு முறை பார்த்தபின், பார்த்த பொருட்களில்
எத்தனை பொருட்களை தவறின்றி ஒருவரால் நினைவுபடுத்திக் கூற முடியுமோ அதுவே அவரது
நினைவு வீச்சாகும்.
* இதை நினைவு உருளை எனும் கருவியைப் பயன்படுத்தி அறியலாம்.
* நினைவு வீச்சு உடனடி நினைவை சோதிக்கிறது.
* வயது அதிகரிக்க நினைவு வீச்சு அதிகரிக்கிறது.
* 4 (அ) வயது குழந்தைகளின் நினைவு வீச்சு 6 ஆக இருக்கும்
ஞாபக சக்தியின் படிநிலைகள்:
1. கற்றல்
2. மனத்திருத்தல்
3. மீட்டுக் கொணர்தல் - ஒப்பித்தல் (அ) தேவைப்படும் போது மீட்டுக்
கொணர்வது.
4.மீட்டுணர்தல் (அ) மீட்டறிதல் - அடையாளம் காண்பது.