கற்றல் கோட்டுப்பாடுகள் (Learning Theories) 1
கற்றல் கோட்டுப்பாடுகள் (Learning Theories)
ஸ்கின்னரின் கற்றல் கோட்டுப்பாடுகள்
* கற்பவரின் செயலை வலுப்படுத்திட ஒரு தூண்டல் இருத்தல் வேண்டும்.
* கற்பவர் செயலை வெளிப்படுத்தியவுடன் அத்தூண்டல் வழங்கப்படுதல்
வேண்டும்.
* செயல் வெளிப்பட்டு ஒவ்வொரு முறையும், அத்தூண்டல் தொடர்ந்து
பலமுறை வழங்கப்படுதல் வேண்டும்.
உட்காட்சி வழிக் கற்றல் - Learning by Insight
* முதன்முதலில் வெளியிட்டவர் - கோஃஹலர்
* இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
* கெஸ்டால்ட் எனும் உளவியல் பிரிவைச் சேர்ந்தவர்.
* சுல்தான் எனும் மனிதக் குரங்கை வைத்து சோதனை செய்தார்.
* கற்றல் என்பது வலுவூட்டும் தூண்டலால் நிகழும் நடத்தை அல்ல என்பதை
கோஃஹலரின் கருத்தாகும்.
* பிரச்சனைக்குரிய தீர்வு திடீரென சில உண்மைகளின் புலன் காட்சின்
அடிப்படையில் தோன்றுவது. கோஃஹலரின் உட்காட்சி எனப்படும்.
* இதன் அடிப்படையில் அமைவது மனிதக் கற்ரலும், விலங்குக் கற்றலும் ஆகும்.
* கூண்டில் உள்ள பெட்டிகளை உட்காட்சி மூலம் அடுக்கியும், குச்சிகளை இணைத்தும் வாழைப்பழத்தை சுல்தான் என்னும் குரங்கு
எடுத்தது.
உட்காட்சி கற்றலை பாதிக்கும் காரணிகள்
1.கற்பவரின் நுண்ணறிவு
2.முன் அனுபவங்கள்
3.பிரச்சனை தோன்றும் முறை
4.ஆரம்ப முயற்சி