குறியீட்டுச் சிந்தனை- குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and
Pedagogy Paper 1,2
குறியீட்டுச் சிந்தனை
* குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில்
உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.
* குழந்தைகள் இடைவெளி,
காரண காரியம், அடையாளம் காணுதல்,
வகைப்பாடு செய்தல் மற்றும்
எண்ணுருக்கள் இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் குறியீட்டுச் சிந்தனை
வளர்ச்சி அடைகிறது.
* குழந்தைகள் சிலவற்றை சிசுப் பருவத்திலிருந்தே புரிந்து கொள்ளத்
தொடங்கி விடுகின்றனர். மற்றவை முன் குழந்தைப் பருவத்தில் வளர ஆரம்பிக்கின்றன.
எனினும் பின் குழந்தைப் பருவம் வரை இந்த வளர்ச்சி முழுமை அடைவதில்லை.
* குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு,
மொழியால்
கருத்துப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் குறியீட்டுச்
சிந்தனையின் வெளிப்பாடுகளே ஆகும்.
* பாவனை விளையாட்டில் குழந்தைகள் தங்களை மருத்துவர் போலவும், ஒட்டிநர் போலவும் உருவகப்படுத்தி கொண்டு விளையாடுகின்றனர்.
* குழந்தைகளின் குறியீட்டுச்சிந்தனைக்கு எண்ணுருக்களும் எழுத்துக்களும்
அவசியம். மொழியைப் பயன்படுத்தி குழந்தைகள் வார்த்தைகளைப் பேசுகின்றனர், கேட்கின்றனர்.
* புலன் உணர்ச்சி அல்லது செயல் குறிப்பு இல்லாமல் மனத்தளவில்
நடைபெறுவது குறியீட்டுச் சிந்தனையின் தன்மையாகும்.
* குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சி தர்க்க முறை சிந்தனை ஆகும்.
தர்க்க முறை சிந்தனை என்பது குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி ஒரு
முடிவையெடுத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும்.
* ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிரமப்படி
சிந்திக்கத் தொடங்குகிறது என்று பியஜே குறிப்பிடுகிறார்.
* பியாஜெ மற்றும் அவரது சகாக்கள் குழந்தைகள் தர்க்க சிந்தனை வளர்ச்சியை
அனுமானம் செய்வதன் மூலம் ஆரம்பிக்கின்றனர் என்று கருதுகின்றனர்.
* பள்ளிமுன் பருவத்தில் (3-6 ஆண்டுகள்) குழந்தைகள்
எண்களைப்பற்றிய 5 விதிகளை ஒரளவு புரிந்துக்கொள்கின்றனர்.
* குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி குழந்தைகள் பொருள்களுக்கு இடையே உள்ள
இடைவெளி தொடர்பு பற்றி சரிவர தெரிந்து கொள்ள உதவுகிறது. இதுவே இடைவெளி தர்க்க
சிந்தனை எனப்படுகிறது.
* வினைக்கும் பயனுக்கும் இடையே உள்ள காரண காரிய தொடர்பை சிறு
குழந்தைகள் அறிந்திருந்தாலும்,
2 ஆண்டுகள் வரை காரண காரிய
தர்க்க முறை சிந்தனை வளர்ச்சி பெறவில்லை ஏன்? எதற்கு? என பல்வேறு வினாக்களைத் தொடுப்பது குழந்தைகளின் காரண காரிய சிந்தனை
வளர்ச்சியின் வெளிப்பாடே.
1 ஒரு பொருளுக்கு ஒர் எண்ணைத் தொடர்பு படுத்துதல். 2. நிலையான எண் வரிசை (1,2,3,4,----) 3. எந்தப் பொருளிலிருந்து எண்ணத் தொடங்கினாலும் மொத்த எண்ணிக்கை
சமம். 4. பொருள்களின் மொத்த எண்ணிக்கை கடைசிப் பொருளின்
எண்ணாகும். 5. இந்த நான்கு விதிகளும் எந்தப் பொருளுக்கும்
பொருந்தும்.
* ஐந்து வயதில் குழந்தைகள் 20 மற்றும் அதற்கு மேலும் எண்ண
முடிகிறது. ஒன்று முதல் பத்து வரை எண்களின் அளவை அதாவது பெரியது, சிறியது என அறிந்து கொள்ள முடிகிறது.
* பள்ளியில் பாடங்களைக் குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்கு வரும்போது அவர்களின் குறியீட்டுச் சிந்தனையும் தர்க்க முறை சிந்தனை வள்ர்ச்சி தொடங்கப் பெற்று இருந்தாலும், அவை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.
* குழந்தைகளின் சிந்தனையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம்
குழந்தைகள் அறிதல் திறன் வளர்ச்சியில் முழுமை அடையவில்லை என்பதே ஆகும்.