சிந்தனை - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and Pedagogy Paper 1,2
சிந்தனை
* சிந்தித்தல் என்பது ஒரு அறிவார்ந்த செயலாகும். உளவியல் நோக்கில்
சிந்தனை என்பது புறத்தூண்டல்களால் நம் உள்ளத்தில் ஏற்படும் அல்லது தொடர்ந்து
நிகழக்கின்ற ஒரு மனச் செயலாகும்.
* ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அல்லது முடிவை அடைவதற்கான வழி
தேடும் மனத்தளவிலான முயற்சியே சிந்தனை என்று கூறலாம். மேலும் சிந்தனை என்பது
அறிதல் திறனின் கூறாகும்.
* பழைய அனுபவங்களைச் சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தைப்
பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது குவிச்சிந்தனை(Convergent Thinking) என்று கூறுகிறோம்.
* பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து மேலும்
ஒரு புதிய அனுபவத்தைப் பெற முயற்சிப்பதை விரிசிந்தனை(Divergent Thinking) என்று கூறுகிறோம்.
* புலன்காட்சி நினைவு போன்ற பலவும் ஆய்ந்தறிதலில் பயன்படுத்தப்
படுவதால் ஆய்ந்தறிதலை சிந்தனையின் முழுச் செயல் எனலாம்.
* ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய முயலும் ஒருவனுக்குத் தடைகள்
ஏற்படும்போது அவனுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனைகள் இல்லையெனில் ஆய்தல்
தேவைப்படாது.
* ஆய்வுகளின் காணப்படும் பல்வேறு படிகளைப் பற்றி ஜான்டூயி கூறுவன 1. பிரச்சனையை உணர்தல்,
2. பிரச்சினையைத் தீர்க்கவல்ல
விவரங்களைத் திரட்டுதல் 3. கருதுகோள்களை அமைத்தல் 4. முடிவை எட்டுதல் 5.
முடிவைச் சோதித்தறிதல்
ஆகியன.
* பல செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்து அவற்றினின்றும் சில பொது
விதிகளை வருவித்தல் தொகுத்தறி அனுமானமாகும்.
* ஒரு பொது விதியைப் பல தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், நிலைமைகளுக்கும் பயன்படுத்திப் பார்த்தல் பகுத்தறி அனுமானமாகும்.
* தன் எண்ணங்களை பிறருக்கு எடுத்தியம்பவும், பிறர் கருத்துக்களை அறியவும் மொழித்திறன் தேவைப்படுகிறது.
* சிந்திப்பதற்கும் மொழி பயன்படுகிறது. மொழியின் வளர்ச்சிக்கும்
சிந்தனை உதவுகிறது.