நினைவு - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and Pedagogy Paper 1,2
நினைவு:
* நம் புலன்கள் கற்று அஅனுபவித்த விவரங்களை மனதில் இருத்திக் கொண்டு
நமக்குத் தேவைப்படும்போது எடுத்துத்தருகிறது.
* மனதில் சேமித்து வைத்துளஅள விவரங்களை நினைவு என்று கூறுகிறோம்.
பொருளுணர்ந்து கற்றல் நீண்ட நினைவில் நிற்கும்.
* மெதுவாக நிதானமாக அவசரமின்றிக் கற்பது நினைவாற்றலைப் பெருக்கும்
மற்றும் நேரத்தைச் சிக்கனப்படுத்தும்.
* பல புலன் வழிக் கற்ரல் மூலமாகக் கற்பவை மனதில் வெகுநாட்கள் வரை
நிலைத்து நிற்கும்.
* சுதந்திரமாகத் தானே கற்றல், கற்றவற்றை நினைவில்
இருத்திக் கொள்ள சிறந்த வழியாகும்.
* பொதுவாக நம் புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் அனைத்தும் முதலில்
குறுங்கால நினைவுப் பகுதிக்குச் செல்கிறது. இவற்றின் நிலைப்புத் தன்மை சில
நாட்களோ அல்லது சில வாரங்களேயாகும்.
* குறுங்கால நினைவுப் பகுதிக்குட் டென்ற விவரங்களை மீண்டும் மீண்டும்
சிந்தித்து அல்லது கற்று உணரும்பொழுது அல்லது மீட்டுக் கொணரும்பொழுது அவை
நெடுங்கால நினைவுப் பகுதிக்கு எளிதில் சென்றடைகிறது.
* நினைவு 1.புலனறி நினைவு, குறுகிய கால நினைவு, நீண்ட கால நினைவு என மூன்று வகைப்படும்.
* குறுகியகால நினைவினை தற்கால நினைவு(STM) என்றும், நீண்ட கால நினைவினை நி்லையான நினைவு (LTM) என்றும்
குறிப்படுவர்.
* ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் 7+2 உருப்படிகளை மட்டுமே
வைத்திருக்க முடியும் என்று ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதையே நினைவு
வீச்சு(Memory Span) என்று குறிப்பிடுகிறோம்.
* நினைவு வீச்சை நினைவு உருளை (Memory Drum) என்ற கருவியைப் பயன்படுத்தி அறியலாம்.