குழந்தைகளின் மொழி வளர்ச்சி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and Pedagogy Paper 1,2
குழந்தைகளின் மொழி வளர்ச்சி
* மொழி என்பது தனது எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மனதால்
வகுக்கப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
* குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிக்கு அடிப்படையாக உடல்
முதிர்ச்சி(வாய், உதடு ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்
திறன்) அமைகிறது.
* பிறந்த குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி
அடைந்ததும் தனது முதலாவது பிறந்த நாளில் (10 முதல் 14 மாதங்களில்) அடையாளம் காணக்கூடிய தெளிவான உச்சரிப்புடன் கூடிய முதல்
சொல்லைப் பேசுகிறது.
* பொதுவாக 18 மாதங்கள் வரை குழந்தைகள் ஒரு தனியான சொல்லைப்
பேசி தம் கருத்தைத் தெரிவிக்கிறது.
* 18-24 மாதங்கலில் குழந்தை சிறு வாக்கியங்களை பேசத் தொடங்குகிறது. முதல்
முக்கியமான அரு சொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசுகிறது.
* 20-30 மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை வாக்கியத்தில் அமைத்து
பேசுகின்றனர்.
* 12 வயதில் குழந்தையின் சொற்களஞ்சியம் சுமார் 10000க்கும் அதிகமான சொற்களைக் கொண்டதாக உள்ளது.
* குழந்தைகளின் ஒலியெழுப்பும் செயல், மொழித் திறனாக உருவாவதில் 3 படிநிலைகள் உள்ளதாக ஸ்கின்னர் குறிப்பிடுகிறார்.
* குடும்பப் பின்னணியில் பூவா, ஆம், மம்மு போன்ற உணவைக் குறிக்கும் சொற்களை குழந்தை தன் தாயிடமிருந்து
கற்கிறது. இதனை குழந்தையின் தாயார் மொழி என்கிறோம்.
* மொழி வளர்ச்சியில் குழந்தைகள் தங்கள் வட்டாரங்களில் வழங்கப்படும்
மொழியையே முதலில் கற்றுக் கொள்கின்றனர்.
* குழந்தை உலகத்தோடு இணைந்து செயற்றுவதால் ஏற்படும் தனது வளர்ச்சியில்
ஒவ்வொரு நிலையிலும் தனக்கு ஏற்படும் சோதனைகளில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து தன்னுடனான உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி
நிலையிலும் மாறுபடுகிறது என்கிறார் எரிக்சன் என்னும் உளவியலார்.
* குடும்பத்தினண் பொருளாதாரச் சூழ்நிலை குழந்தைகளின் அறிதல் திறன்
வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* உடன்பாட்டு தற்கருத்து கொண்ட மாணவர்கள் வகுப்பறையில்
சுறுசுறுப்பாகவும், வெற்றி உணர்வோடும் தன்னம்பிக்கையுடன்
திகழ்வார்கள்.
* எதிர்மறை கருத்து கொண்ட மாணவர்கள் பள்ளி இணைக்கம், சமூக இணக்கம், தன்னணக்கம் போன்ற செயல்பாடுகளில் குறைபாடு
உடையவர்களாக இருப்பார்கள்.
* வெற்றி வெற்றியையும், தோல்வி தோல்வியையும்
வளர்க்கும் என்கிறது நவீன உளவியல் கோட்பாடு. எனவே மாணவர்களின் திறமை, ஆர்வம், விருப்பத்திற்கேற்ப செயல்பாடுகலில் திறமைகளை
ஈடுபடுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
* அவநம்பிக்கை, வெறுப்பு, தோல்வி, உணர்ச்சி, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற
எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில் தற்கருத்து அமைவது எதிர்மறை தற்கருத்து
எனப்படும்.